இந்தியாவின் முன்னணி ஃபேஷன் ஸ்டோர்களில் ஒன்றான லைஃப்ஸ்டைல், சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் புதுப்பிக்கப்பட்ட ஸ்டோரை திறந்துள்ளது. விழாவில் கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்டோரை திறந்து வைத்தார். மான்யவார், கவர் ஸ்டோரி, ஶ்ரீ, மெலான்ஜ் கிட்ஸ், ஹெர்ம்ஸ் ஃப்ராக்ரன்சஸ் மற்றும் பல புதிய பிராண்டுகளின் லேட்டஸ்ட் கலெக்ஷன்கள் இந்த ஸ்டோரில் இடம் பெற்றுள்ளன.
80,000 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புத்தம்புதிய லைஃப்ஸ்டைல் ஸ்டோர், வாடிக்கையாளர்களுக்கு சீரான ஷாப்பிங் அனுபவத்தை தரும். நிறைய புதிய பிராண்டுகளின் ஃபேஷன் கலெக்ஷன்கள் நியாயமான விலையில் விற்பனைக்கு உள்ளன. ஃபோர்கா, ஜின்ஜர், மெலான்ஜ், கப்பா, கோட், பாஸினி, ஃபேம் ஃபாரெவர், ஜூனியர்ஸ் உள்ளிட்ட லைஃப்ஸ்டைலின் வழக்கமான பிராண்டுகளும் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து பேசிய சர்வதேச லைஃப்ஸ்டைல் பிரைவட் லிமிடட், முதன்மை மேலாளர் திரு.வசந்த் குமார், “வாடிக்கையாளரின் ஷாப்பிங் அனுபவம் சீராக இருக்க வேண்டுமென்பதில் கவனமாக உள்ளோம். அதனால், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஸ்டோரில் நிறைய பிராண்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். புதுப்பிக்கப்பட்ட இந்த ஸ்டோர், வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
ஸ்டோரை திறந்து வைத்த நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, “எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்டோர் இன்னும் பெரிதாக, அதிக ஃபேஷன் கலெக்ஷன்களை கொண்டுள்ளது. லேட்டஸ்ட் டிரெண்டி கலெக்ஷன்களை ஷாப்பிங் செய்யும்போது நான் தேர்ந்தெடுக்கும் ஸ்டோர்களில் லைஃப்ஸ்டைலும் உண்டு. புதிய பிராண்டுகளின் ஃபேஷன் ஆடைகளை வாங்கவும், சிறந்த ஷாப்பிங் அனுபவதிற்காகவும் லைஃப்ஸ்டைலை தேர்ந்தெடுங்கள். நான் மீண்டும் வந்து நிறைய ஷாப்பிங் செய்ய காத்திருக்கிறேன்” என்றார்.