Latest News :

மாதாந்திர கடனை திரும்ப செலுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும்! - நிதி அமைச்சருக்கு TEMOWA கோரிக்கை

73dcda2d3d0fd9171b7252c277fae679.jpg

அனைத்து கட்டுமான இயந்திரங்கள் மற்றும் லாரிகளுக்கு, மாதாந்திர கடன் வணை 3 மாத காலத்திற்கு விளக்கு தமிழ்நாடு எர்த் மூவிங் எக்யூப்மெண்ட்ஸ் ஓனர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்ஸ் (TamilNadu Earth Moving Equipments Owners Welfare Association) கோரிக்கை விடுத்துள்ளது.

 

இது குறித்து, அச்சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன் மத்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அந்த கடிதத்தில், ”அனைத்து கட்டுமான இயந்திரங்கள் மற்றும் லாரிகளுக்கு, மாதாந்திர கடன் தவணை 3 மாத காலத்திற்கு விளக்கு அளிக்குமாறு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

Covid -19 தாக்கம் காரணமாக, அனைத்து உள்கட்டமைப்பு, கட்டுமான துறை வேலைகளும் தடை ஏற்பட்டு விட்டது. கரோனா பாதிப்பு குறித்த நெருக்கடி, ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுமான தொழில் மந்தநிலை போன்ற பல்வேறு காரணங்களால், பெரும்பாதிப்பினை தாங்கள் சந்தித்திருப்பதாகவும் இதனால் மாதாந்திர கடன் தவணை மற்றும் EMI,செலுத்துவதில் சிரமம் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதுபோன்ற (COVID19) நெருக்கடி நிலைமைக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய கடினமான சூழ்நிலையை கருத்தில் எடுத்துக்கொண்டு. EMI-க்கள், மாதாந்திர தவணைகள் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 3 மாதகால தடை அறிவிக்க கேட்டுக் கொள்கிறோம். 

 

எவ்வித வருமானமும் இல்லாமல் வங்கி கடனை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுமாயின் உள்கட்டமைப்புத் தொழில் காலத்திற்கும் சரி செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் அபாயநிலை நிலவுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த கடினமான நேரத்தில் இந்தத்துறைக்கு நிவாரணம் வழங்குமாறு மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தமிழகத்தின் வாகன உரிமையாளர்கள் சார்பாக கோரிக்கை மனுவாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

இந்த கடிதத்திற்கு நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வாங்கி எந்தவித நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

இதுபோல ஒவ்வொரு துறையும் பொருளாதார சவாலை எதிர்கொண்டால் நாட்டின் நிதிநிலை மற்றும் பொருளாதாரத்தில் மிக பெரிய தாக்கம் ஏற்பட கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மாதாந்திர கடன் செலுத்தி வரும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிலையம் கேள்விகுறியாகவே உள்ளது.

Recent Gallery