கொரோனா பிரச்சினையால் சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், நீதிமன்றம் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு தடை விதித்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் கடைகளை மூடும் உத்தரவுக்கு தடை விதித்தது. இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகளை நாளை தமிழக அரசு திறக்கிறது. மேலும், டோக்கன் முறையில் மதுபானங்களை விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.