Latest News :

பாசப் போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்!

9fc57ce2f5f962fc00fbd788eb8c3211.jpg

உடன் வளர்ந்த பசு மாட்டு விற்கப்பட்டதை தொடர்ந்து அந்த பசு மாட்டை போக விடமல் வாகனத்தை தடுத்து காளை நடத்திய பாசப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

 

இந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் வி.ப.ஜெயபிரதீப், அந்த பசு மாட்டினை மீட்டதோடு, மாட்டின் உரிமையாளர் மாட்டு வியாபரிடம் வாங்கிய பணத்தை வியாபரிடம் வழங்கினார். இதையடுத்து, கிராமத்து பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பசு மாட்டினை வழங்கினார். 

 

OPS Son Jayapradeep

 

இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் மற்றும் நகரசெயலாளர் V.k.குமார், ஊராட்சி தலைவர் செல்வராணிசிதம்பரம், வட்டசெயலாளர் கர்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Recent Gallery