IGOT என்கிற வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமானது புதிதாக சென்னை கிண்டி MKN ரோட்டில் இனிதே துவங்கியது.
மிக பிரம்மாண்டமான அளவில் அதிக சேவைகள் கொண்டுள்ள நிறுவனமாக தொடங்கப்பட்டுள்ள IGOT மதிப்பிற்குரிய நீதிபதி திரு. AKN வைத்தியநாதன் அவர்களால் சிறப்பான முறையில் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனரான மதிப்பிற்குரிய திரு. ராஜேஸ் கண்ணா அவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற IPS அதிகாரி திரு. S S கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் கலைமாமணி Dr திரு. G. மணிலால் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி IGOT ஐ வாழ்த்தினர்.
பின்னர் IGOT ன் இயக்குனர் மற்றும் அதன் குழுவினனை சந்தித்ததோடு வங்கி அல்லாத நிதி சேவைகள் பற்றிய செயல்பாடுகள், சிறப்பாக செயல்படுவதற்கான குறிப்புகள் மற்றும் பல புதிய தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் திரு. G . சுவாமிநாதன் (இயக்குனர் - IGOT பைனான்ஸ் லிமிடெட்) மற்றும் திரு. S. ரவிசங்கர் (செயல் இயக்குனர் - IGOT. IGOT பற்றிய வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள், கடனுதவிகள், கடன் உதவிக்கான அடிப்படை தேவைகள் மற்றும் சலுகைகள் பற்றி பொது மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் விளக்கமளித்தனர்.
விழாவினை சிறப்பாக வழி நடத்த உதவியதோடு நன்றியுரை வழங்கி விழாவை மேலும் சிறப்பித்தார் பரிவு Dr S சக்திவேல். விழாவின் ஒரு பகுதியாக மும்மத வழிமுறைகளின்படி பிரார்த்தனைகள் நடைபெற்று பல்வேறு துறையை சார்ந்த பெரும்பான்மையான மக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து வாழ்த்தி விடை பெற்றனர்.