Latest News :

மக்கள் தொண்டனாக மாறிய அமைச்சர்! - வியந்து பாராட்டிய முதல்வர்

d3f1df0a8ac48258521670b13046881c.jpg

நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் ஒருபக்கம் என சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது இயற்கை.

 

இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர்.

 

தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளை இரண்டு நாட்களாக செய்து வருகிறார் அவர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைப்பதும், உணவு சமைத்து தானே விநியோகம் செய்வதும் அத்தியாவசிய பொருட்களை அள்ளிக் கொடுப்பதும்  இந்த அமைச்சரின் வாடிக்கையான விஷயமாக மாறியிருக்கிறது.

 

காரில் வலம் வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு மத்தியில் மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து அதற்கு தீர்வு காண்பது என பல தளங்களில்,களங்களில் நின்று பணியாற்றி வருகிறார் அந்த அமைச்சர்.அவரது உதவும் மனப்பான்மை முதலமைச்சரின் பார்வைக்கு எப்படியோ சென்றிருக்கிறது.

 

இதையடுத்து உடனடியாக அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இவரது செயலை பலரும் அறிய வேண்டும் என்பதற்காக பொதுவெளியில் அதாவது முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.

 

ஆம் அந்த அமைச்சர் யார் என்பது தானே உங்கள் அனைவரது கேள்வியாக இருக்கிறது? வேறுயாருமல்ல எப்போதும் மக்களோடு மக்களாகவே பயணிக்கும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர்,அமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர் என தேர்தலையும் மக்கள் மனதையும் சேர்த்தே வென்ற அமைச்சர் ஜெயக்குமார் தான் அவர்.

 

Minister Jayakumar

Recent Gallery