Latest News :

அதிமுகவுக்கு எதிராக களம் இறங்கிய வழக்கறிஞர்கள் படை!

06a84c592d219164c9c27155c70ac830.jpg

திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது அரக்கோணம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., ரவியை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினாரோ அன்றில் இருந்தே அரக்கோணம் தொகுதி தமிழக சட்டசபை தேர்தலில் தனி கவனம் பெற்ற தொகுதியாக மாறியது.

 

அதோடு, அசைக்க முடியாத திமுக கோட்டையாக ஒரு காலத்தில் இருந்த அரக்கோணம் தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆளுமையில் இருக்கிறது.

 

சிட்டிங் எம்.எல்.ஏ. ரவி 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்றாலும் தொகுதியில் பெரும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறார்.

 

மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாததால் அவர் சார்ந்த ஆளும் கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர்.

 

அதே நேரம் திமுக தரப்பில் தொகுதி முழுதும் கட்சியினரிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

 

10 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாமல் இருப்பதால் இந்த முறை எப்படியும் தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முழு வேகத்தில் கட்சியினருக்கு உத்தரவு போட்டிருக்கிறார் மாவட்ட செயலாளர் காந்தி.

 

அதோடு, தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் அதிமுக தரப்பில் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதால் மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் தீவிரமான தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், தொகுதியில் எங்கு ஆளும் கட்சியால் இடையூறுகள் ஏற்பட்டாலும் உடனடியாக அதை எதிர் கொள்ளும் வகையில் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம்.

 

இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள திமுக வக்கீல்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் போட மாவட்ட செயலாளர் காந்தி முடிவு செய்து இருக்கிறாராம்.

 

இது தவிர அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் ரேசில் இருந்த பவானி வடிவேலுவுக்கு "கலப்பு திருமண சிக்கல்" காரணத்தால் வாய்ப்பு ஏற்கனவே பறிபோய்விட்டது.

 

கடந்த முறை தேர்தலில் நின்று தோற்ற ராஜ்குமாரும் " அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஏலக்காய் மாலை போட்ட" விவகாரத்தால் வேட்பாளர் ரேசில் இருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்.

 

அது மட்டுமல்லாமல் தொகுதியில் சர்வே எடுத்த ஐ பேக் டீமும், முன்னாள் அமைச்சரின் தனி டீமும் கொடுத்த ரிப்போர்ட் படி புதிய வேட்பாளர் களம் இறக்கப்பட்டால் திமுக வெற்றியை தவிர்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்களாம். 

 

அந்த வகையில் திமுக சார்பில் புதிய வேட்பாளாராக வழக்கறிஞர் எழில் இனியன் களம் இறங்க வாய்ப்புகள் அதிகமாம். காரணம், ஏற்கனவே தொகுதி முழுதும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் கோரிக்கை புதிய வேட்பாளர். அதே நேரம் ஆளும் கட்சி செய்யும் தாறுமாறான  செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செலவு செய்யும் பலமும் எழில் இனியனிடம் இருப்பதாக கூறப்படுகிறது. 

 

 

எல்லாவற்றிற்க்கும் மேலாக கோஷ்டி பூசலில் எப்போதும் நிறைந்து காணப்படும் அரக்கோணம் திமுகவில்    எந்த கோஷ்டியிலும் சிக்காதவர் என்பதும் வக்கீல் எழில் இனியனுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறதாம். இதன் காரணமாக மாவட்டத்தின் கரிசன பார்வையும் இவர் மீதே திரும்பி உள்ளதாம். 

 

அதோடு வக்கீல்கள் பலத்தை அதிகரிக்க அதிமுக உட்பட பல கட்சிகளில் இருந்து பல வக்கில்களை மாவட்டம் முன்னிலையில் திமுகவில் சேர்த்த நிகழ்வும் சமீபத்தில் நடந்ததாம். அதில் சேர்ந்த வக்கீல் ஒருவர் இப்போது உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. ரவிக்கு மிக நெருக்கமான நண்பராம் என்பது கூடுதல் தகவல். 

 

இந்த தகவல்களால் அரக்கோணம் தொகுதியில் உள்ள திமுக  வக்கீல்கள் மத்தியில் உற்சாகம் கரைபுறண்டு ஓடுகிறதாம்.

Recent Gallery