எல்லா விதைகளும்
விருட்சம் ஆவதில்லை
விருட்சங்கள் எல்லாம்
நிழல் தருவதில்லை...
எங்களின் போதி மரமே!
உங்களை வணங்குகிறேன்...
வேதா இல்லம்
எங்கள் முகவரி மட்டுமல்ல;
இந்த தேசத்தின் முகவரி!
வீரம் உங்களிடம்
விலாசம் கேட்கும்
விவேகம் உங்களிடம்
யாசகம் கேட்கும்...
மக்களால் நான்;
மக்களுக்காகவே நான்..
வெறும் வார்த்தையல்ல,
வாழ்க்கை!
"இதய தெய்வம்"
உதடுகளின் வார்த்தையல்ல
உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று!
எதிர்ப்பவர்களுக்கு
நீங்கள் சிம்ம சொப்பனம்;
எளியோர்கள் அமரும் அரியாசனம்.
கோபுரங்களைக் காட்டிலும்
குடிசைகளை விரும்பியவர்
நீங்கள். ஆதலால் தான்
அனைவருக்கும் என்றென்றும்
நீங்களே இதய தெய்வம்!
மகமே! எங்கள் ஜெகமே!!
உங்களை நினைக்காத
நாளில்லை...
மறந்தால் நாங்கள்
நாங்களில்லை...
நீங்கள் ஆள வேண்டுமென
சொன்னதைக் காட்டிலும்
இன்னமும்
நீங்கள் வாழ வேண்டுமென
நாங்கள்
சொல்லியிருக்க வேண்டும் அம்மா!
ஒவ்வொருவரின் பிறந்த நாளும் அவர்களுக்கு சிறந்த நாளாக அமையும், உங்கள் பிறந்த நாள் இந்த தேசத்திற்கே சிறந்த நாள்!
அம்மா! இந்த
மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும்...
அது முடிந்த பின்னும்
ஒலிக்கும் வார்த்தை
அம்மா! அம்மா!! அம்மா!!!
உங்கள் பாதையில் எங்கள் பயணம் என்னாளும் தொடர ஆசீர்வதியுங்கள்
அம்மா!!!
இப்படிக்கு,
அம்மாவின்
உண்மை விசுவாசி
டி.ஜெயக்குமார்.