Latest News :

ஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி! - மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதி

0ba62ed08f37756ef9bc2337fb141ab2.jpg

ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் ஜேப்பியார் அவர்களின் மனைவி ரெமிபாய்க்கு சொந்தமான சென்னை இராயபேட்டை வீட்டின் மீது மறைந்த ஜேப்பியார் ரூபாய் 5 கோடி கடன் பெற்றதாக போலி ஆவனம் தயார் செய்து திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டவர்கள் ஐந்து பேர் மீது சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

பிரபல ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் ஜேப்பியார் அவரது மனைவி (79) மகள்கள் என குடும்பத்துடன் ஆரம்ப காலகட்டத்தில் சென்னை இராயபேட்டை கணபதி தெருவில் வாழ்ந்து வசித்து வந்தனர். 

 

கடந்த 1985 ஆம் ஆண்டு ஜேப்பியார் அவர்கள் 3600 சதுரடி கொண்ட இந்த வீட்டை தனது மனைவி ரெமிபாய் பெயரில் வாங்கியுள்ளார்.  

 

இந்நிலையில் ரெமிபாய்க்கு சொந்தமான சென்னை இராயபேட்டை வீட்டின் கேட்டை கடந்த 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 16-ம் தேதி மூன்றுபேர் பூட்டியது அங்கு பாதுகாப்பிற்காக பொறுத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை கவனித்துள்ளனர். 

 

இதுகுறித்து பூட்டு போட்ட மூவரிடம் ரெமிபாய் சட்ட ஆலோசகர் கண்ணன் பேசியபோது இந்த இடம் சென்னை நந்தனம் சிஐடி நகரை சேர்ந்த தனியார் பைனான்சியரான முரளிதரன் என்பவர்க்கு சொந்தமானது என்று கூறிய அவர்கள் முரளிதரன் உத்தரவின் பேரில் பூட்டு போட்டதாகவும் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். 

 

மேலும் ஜேப்பியார் செயலாளராக பணியாற்றிய ஜோஸிடம் ரெமிபாய் கேட்டபோது ஜேப்பியார் அவர்களுக்கு அப்பொழுது அவசர தேவைக்காக ரூபாய் 5 கோடி தேவைப்பட்டதால் மனைவிக்கு சொந்தமான இராயபேட்டை வீட்டின் மீது கடனாக மறைந்த ஜேப்பியார் அவர்கள் ரூபாய் 5 கோடி பணம் பெற்றதாகவும் கூறியுள்ளனர் சகோதரர்கள் ஜோஸ் மற்றும் ஜஸ்டின். 

 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வயது முதிர்ந்த ரெமிபாய் ஜேப்பியார் இதில் வில்லங்கம் உள்ளது என்பதால், அவருடைய சட்ட ஆலோசகர் கண்ணன் என்பவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 06.08.2020 அன்று புகார் அளித்தனர். 

 

புகாரை தொடர்ந்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் துரைப்பாக்கம் உதவி ஆணையராக அப்பொழுது பொறுப்பில் இருந்த நீலாங்கரை உதவி ஆணையர் விசுவேஷ்வரய்யா விசாரணை மேற்கொண்டனர். 

 

பின்னர் சிஎஸ்ஆர் மட்டும் போட்டு கொடுத்த செம்மஞ்சேரி ஆய்வாளர் விஜயகுமார் மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 30.09.2020 அன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ரெமிபாயின் சட்ட ஆலோசகர் கண்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

வழக்கை விசாரித்த நீதிபதி செம்மஞ்சேரி ஆய்வாளர் விசாரித்து வழக்கு பதிவு செய்யும்படி ஆணை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற ஆணையை அலட்சியப்படுத்தும் வகையில் அதை கண்டும் காணாமல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளார் ஆய்வாளர் விஜயகுமார். 

 

பின்னர் சிசிபியில் ரெமிபாய் தரப்பில் முறையான ஆவணங்களை சமர்பித்ததால் ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ், அவரது அண்ணன் ஜஸ்டின், பைனான்சியர் முரளிதரன் (59), அவருடைய உதவியாளர் பிரான்சிஸ் (எ) பினு பிரான்சிஸ் (52) உள்ளிட்ட ஐந்து பேர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க திட்டம்தீட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

 

பின்னர் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

 

போலீசார் விசாரணையில் சகோதரர்கள் ஜோஷ் (44), ஜெஸ்டின்(45) இருவரும் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயில் கடியப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த 2004 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்து ஜேப்பியார் அவர்களை சந்தித்துள்ளனர். 

 

இருவரின் குடும்ப சூழலை எடுத்து கூறியதும் ஜேப்பியார் சகோதர்கள் இருவரையும் தனது கல்லூரியில் படிக்க வைத்து அவருடை கல்லூரியிலேயே வேலை வழங்கியுள்ளார். 

 

அண்ணன் ஜோஸ் ஜேப்பியாரின் (Secretary) செயலாளராக பணியமர்த்தியுள்ளார். 

 

ஜேப்பியாரின் செயலாளராக பணியாற்றி வந்த ஜோஸ், ஜேப்பியார் தற்பொழுது உயிருடன் இல்லை என்பதாலும் வயது முதிர்ந்த ரெமிபாய்க்கு தெரியாமல் அவருக்கு சொந்தமான வீட்டின் பத்திரத்தை வைத்துக்கொண்டு ஜேப்பியார் அவர்கள் ரூபாய் 5 கோடி கடன் பெற்றதாக கூறி தனியார் பைனான்சியர் முரளிதரனுடன் இணைந்து திட்டமிட்டு, ஐந்து பேர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

Recent Gallery