Latest News :

பாரா பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் - 6 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

857baf75fc08266394c4369f0afff2f2.jpg

18வது சீனியர் மற்றும் 14வது ஜூனியர் தேசிய பாரா பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் 2021 கர்நாடகா பெங்களூர் மார்ச் 19  முதல் 21 ஆம் தேதி வரை ஸ்ரீ கண்டி ரவா  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சார்பாக கலந்து கொண்ட வீரர்களுக்கு  பயிற்சி அளித்த பயிற்சியாளர் திரு. கணேஷ் சிங் மற்றும் அணி மேலாளர் திரு விஜயசாரதி தலைமையில் ஆண்கள் பிரிவில் 7 வீரர்களும் பெண்கள் பிரிவில் 2  வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 6 பதக்கங்களை வென்று குவித்தனர்.

 

1. வி.சரவணன் -  59 எடை பிரிவு தங்கப்பதக்கம் ( தமிழக வரலாற்றின் பேரா பவர்லிப்டிங் பிரிவில் முதல் தேசிய தங்கப்பதக்கம் )

 

2. சி.வெங்கடேஷ் பிரசாத் - 59 எடை பிரிவு (தமிழக வரலாற்றின் முதல் ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம்)

 

3. பி.கோமதி -  50 எடை பிரிவு வெள்ளிப் பதக்கம்

 

4. ஆர். கஸ்தூரி - 67 எடை பிரிவு வெள்ளிப் பதக்கம் ( முதல் பாரா பெண் பவர் லிப்டிங் சாம்பியன்) 

 

5. ஜி.வேல்முருகன் - 65 எடை பிரிவு  வெண்கலப்பதக்கம்

 

6. எம்.கிருஷ்ணமூர்த்தி - 59 எடை பிரிவு வெண்கல பதக்கம்

 

வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் தலைவர் திரு. சந்திரசேகர் அவர்களும் பொது செயலாளர் திரு ஆனந்த் ஜோதி அவர்கள்  மற்றும் துணைத்தலைவர் திரு கிருபாகர ராஜா அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Recent Gallery