பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பில் கட்சியின் புதிய நிர்வாகிகளுடன், தற்போது நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து ‘தமிழகமும் தாமரையும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் ஷெல்வி தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கு.க.செல்வம், ஆர்.கே.சுரேஷ், கலா மகேஷ், கண்மனி, பிரமீட் நடராஜன், டெய்சி சரண் உள்ளிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் தற்போது நடைபெற இருக்கின்ற 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய, மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின், குறிச்சொல் வாக்கியமான (Lag Line) ”தாமரை மலரட்டும் - தமிழகம் வளரட்டும்” என்ற வாசகம் வெளியிடப்பட்டது.