காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் உலகத்தரம் வாய்ந்த டிக்சா நிறுவனத்தின் தோல், முடி சிகிச்சைக்கான லேசர் கிளினிக்கை திமுக கழக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, தொலைக்காட்சி நடிகை ஆலியா மானசா கலைவாணர் அரங்கம் மக்கள் தொடர்பு அதிகாரி திவாகர், களிகை ஜூலியஸ் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி சிவசண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டிக்சா நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி ஆனந்தி சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்று திருப்பெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் ஆலோசனையுடன் கூடிய கிளினிக்கை அறிமுகப்படுத்தினார்.