Latest News :

கடின பாதையில் சாதனை பயணம்! - யார் இந்த பா.இந்திரன்?

4ef6fc9c5b4a064ac2e688aa43a15baa.jpg

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தலைவர் ஜான் அமலன் பரிந்துரையின் பேரில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் இணைந்து புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருபவர்களை கெளரவிக்கும் வகையில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது.

 

அந்த வகையில், பரத நாட்டிய கலையில் சிறந்து விளங்கியதற்காக பிக் பாஸ் புகழ் நடிகை அபிராமிக்கு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆஃப் டிஸ்டன்ஸ் எஜுகேஷன் உடன் இணைந்து புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டார் பட்டம் வழங்கியது.

 

மேலும், சமூக சேவை மற்றும் ஊடகத் துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக பா.இந்திரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சி வடிவமைப்பாளராக சிறப்பாக செயலாற்றிய சுதர்சன் சேஷாத்திரி அவர்களுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 

இதன் மூலம், வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி  மட்டுமே என்பதை கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அனைவரும் நிரூபித்து காட்டியுள்ளனர்.

 

Abirami

 

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திரு பா.இந்திரன் அவர்கள் கடந்து வந்த பாதை:

 

2009 ஆம் ஆண்டில் Nexus PR என்ற ஊடகத்தினர் உடன் தொடர்பு ஏற்படுத்தும் விதமாக நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் பா.இந்திரன் தொடர்ந்து கடின உழைப்பின் மூலம் நம்பகமான மற்றும் அறிவார்ந்த நற்பெயரைப் பெற்றுள்ளார்.

 

பல ஆண்டுகளாக பா.இந்திரன் துன்பங்களை எதிர்த்துப் போராடி வாய்ப்புகளைப் பெற்றார். வலுவான ஊடக தொடர்புகளை வளர்த்தார். இதன் மூலம் வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டு முதல் உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் வரை, அனைத்து துறைகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுடன் நீடித்த தொடர்புகளை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் பா.இந்திரன் ரோட்டரி இன்டர்நேஷனலின் மை ஃபிளாக் மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தியது, 2014 காஷ்மீர் வெள்ளத்தின் போது பிரதமர் நிதிக்காக நிதி திரட்ட உதவியது மற்றும் ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்களுடன் பணிபுரிந்தது. ஏழு உலக சாதனைகளில் மக்கள் தொடர்பு துறையில்  பா.இந்திரன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

 

பா.இந்திரன் ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களுக்கு சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் போன்ற திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலராக செயல்பட்டுள்ளார்

 

பா.இந்திரன் புத்திசாலித்தனமாகத் தொடர்புகொள்ளும் திறன் மற்றும் ஆக்கப்பூர்வத் திறனுடன் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய கூரான புரிதலுடனும், ஊடகத்துறையில் உறுதியான பி.ஆர் நிபுணராக உருவெடுத்து, நகரத்தில் நடக்கும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் தனது ஊடகப் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்

Recent Gallery