சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற வைப்ரன்ட் கான்செப்ட்ஸ் ஏற்பாடு செய்த இந்தியாவின் மிக முக்கியமான போட்டியான ’Mrs.இந்தியா கேலக்ஸி 2021’ (Mrs.INDIA Galaxy 2021) நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சார்ந்த சென்னையை பூர்வீகமாகக் கொண்ட திருமதி.உஷா திவா தமிழகத்தின் சார்பாக முதன் முறையாக Mrs.கியூட் ஸ்மைல் (Mrs.Cute Smile) பட்டத்தை வென்றுள்ளார்.
வெற்றி பெற்ற திருமதி உஷா வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பை முடித்திருக்கிறார். மேலும், முறையே Venora மற்றும் Vivarsha ஆகிய இரண்டு ஃபேஷன் பிராண்டுகளை நிறுவியுள்ளார்.
இவரது பிராண்டுகளின் குறிக்கோள் "பெண்களை மேம்படுத்துவது ஊக்குவித்தல் மற்றும் எல்லா தரப்பு மக்களின் ஆடை தேவைகளைப் பூர்த்தி செய்தல்" என்பதாகும்.
அவரது பிராண்ட் Venora ஆடம்பரமான, நாகரீகமான மற்றும் வசதியான ஆடைகளை தேடும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. சர்வதேச தளங்களில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு சென்றடைவதை குறிக்கோளாக கொண்டுள்ளது, மறுபுறம் தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் உள்ள உள்ளூர் பெண்களுக்கு திறமையாக பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை அவரது மற்றொரு பிராண்ட் Vivarsha மூலம் செய்து வருகிறார். கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பது முக்கியமானது என்று அவர் நம்புகிறார்.
சம்பளம் தவிர, விற்பனையின் வருவாயில் ஒரு பகுதி தொண்டு நிறுவனங்களுக்கும் செலவிடுகிறார்.
இந்தியா அளவிலான Mrs.India Galaxy அழகிப் போட்டி கின்னி கபூர் மற்றும் ககன்தீப் கபூர் ஆகியோரால் இயக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 திறமையான பெண்களுடன் உஷா போட்டியிட்டார்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துவதற்கான பிரசாரத்தை ஆதரிக்கும் வகையில் இந்த அழகிப் போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் மாபெரும் இறுதி போட்டி -
ககன் வர்மா - Mr.Super Model Universe 2016, நடிகர் மற்றும் மாடல்
அமிதா பாண்டா- Mrs.Universe III 2019
ஷங்கர் சாஹ்னி - பாலிவுட் பாடகர்
பூர்வா ரனாவத் - சர்வதேச யோகா நிபுணர் மற்றும் மாடல் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Mrs.India Galaxy அழகிப் போட்டியில் வெற்றி பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள திருமதி.உஷா திவாவை கெளரவிக்கும் வகையில், சென்னை ஆதித்யா ஓட்டலில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரபல பேஷன் நடன அமைப்பாளர் கருண் ராமன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உஷா திவாவை பாராட்டி பேசினார்.
எல்லாம் வல்ல இறைவனின் கருணை இல்லாமல் இந்த சாதனையை செய்திருக்க முடியாது என்று திருமதி உஷா நம்புகிறார், மேலும் அவர் தனது பெற்றோர், மகன்கள், அவரது அன்பான கணவர், சகோதரர் சகோதரிகள் மற்றும் அவரது தத்துவ ஞானி திரு.பாலாஜி ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்.