சென்னையில் பல்வேறு உணவகங்கள் செயல்பட்டு வந்தாலும், தரம் மற்றும் சுவை நிறைந்த உணவகங்கள் மட்டுமே மக்கள் கூட்டம் நிறைந்தவையாக உள்ளது. அப்படி ஒரு உணவகமாக உருவெடுத்துள்ளது அண்மையில் திறக்கப்பட்டுள்ள சைவ உணவகம் ‘மெட்ராஸ் பொங்கல்’.
பிப்ரவரி 25 ஆம் தேதி திறக்கப்பட்ட ‘மெட்ராஸ் பொங்கல்’ உணவகம் திறந்து இரண்டு நாட்களில் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, உணவங்களின் தரம் மற்றும் சுவைக்காக உணவு பிரியர்களின் பேவரைட் உணவகமாகவும் மாறியிருக்கிறது.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ‘மெட்ராஸ் பொங்கல்’ உணவகத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உணவகத்தை திறந்து வைத்தவர், உணவு வகைகளை சுவைத்து விட்டு கூறுகையில், “இட்லி,வடை,பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன் நாவிற்கு நல்ல ருசியாக இருந்தது. பிறகு மெது வடை சட்னி ,சாம்பாருடன் கலந்து சாப்பிட்டேன் குறிப்பாக சாம்பாரில் நெய்பருப்பின் மனமும், நாவிற்க்கு ரொம்ப சுவையாக இருந்தது. இந்த சுவையை கடைசிவரை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். உணவு வகைகள் மிகவும் தரமான முறையில் உள்ளது என்றும் உணவு தயாரிக்கும் இடம் கூட மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கிறார்கள். மெட்ராஸ் பொங்கல் குழுமத்திற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.
மெட்ராஸ் பொங்கல் குழுமத்தின் இயக்குநர் ஜே.பி கூறுகையில், “எங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த சுவையில் தரமான உணவு வகைகளை மூன்று வேளையும் வழங்குவதே எங்களின் லட்சியம். மேலும் இது எங்களுடைய முதல் படிதான் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் மேலான ஆதரவில் இந்த படிகள் நிச்சயமாக உயரும் என நம்புகிறோம். வாருங்கள் வரவேற்கிறோம்..! உணவு அருந்துங்கள் நிறைவாக செல்லுங்கள்.” என்றார்.
காலையில் சுவையான சிற்றுண்டி இட்லி, வடை, தோசை, பொங்கல் மற்றும் சக்கரை பொங்கல், பாயாசம், கேசரி உள்ளிட்ட பல வகையான உணவுகளும், மதியம் சாப்பாடு வகையில் உள்ள வெரைட்டி ரைஸ் வகைகளும், மாலையில் டிபன் வகைகள், ஸ்நாக்ஸ் வகைகள், சப்பாத்தி வகைகள் ‘மெட்ராஸ் பொங்கல்’ உணவகத்தில் கிடைக்கும்.
இங்கு தயார் செய்யும் அனைத்து உணவு வகைகளும் சுத்தமான முறையிலும், சுகாதாரமான வகையிலும் தயார் செய்யப்படுவதோடு, சமையல் கலையில் கைதேர்ந்த சீனியர் செப்பு களை வைத்து உணவு வகைகள் தயாரிக்கப்படுவது மெட்ராஸ் பொங்கல் உணவகத்தின் தனிசிறப்பு.
‘மெட்ராஸ் பொங்கல்’ உணவக முகவரி:
எண்.32,3வது குறுக்கு சாலை, கஸ்தூரி பாய் நகர்
அடையாறு, சென்னை
(அடையாறு நல்லி சில்க்ஸ் எதிரில்)