Latest News :

30,000 முதல் 30,00,000 வரை 'அக்வா ஃபீல்' (Aquafeel.in)குளியல் தொட்டி!

da58c048c4fcdda5ea25bfd2142d02b4.jpg

இன்றைய சூழலில் அனைத்து தரப்பு மக்களும் காலையில் எழுந்ததும் நீராடுவது வழக்கம். ஆனால் ஒரு பிரிவினர், நீராடுவதிலும் அறிவியல் பூர்வமான விசயங்களை இணைத்து பிரத்யேக குளியல் தொட்டியை உருவாக்கி அதில் நீராடி புத்துணர்வை பெறுகின்றனர். மேலும் இது தொடர்பாக சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் ப்ராப்பர்ட்டி ஃபேர் எனும் வீட்டிற்கு தேவையான கட்டுமான பொருள் தொடர்பான தேசிய அளவிலான கண்காட்சியில் நவீன ரக குளியல் தொட்டிகள் வெவ்வேறு வடிவங்களில் இடம் பிடித்திருந்தது. 

 

கண்காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்களில் கவனத்தைக் கவர்ந்த இந்த குளியல் தொட்டி குறித்து மேலதிக விவரங்களை பெறுவதற்காக இத்துறை நிபுணரும், 'அக்வா ஃபீல்' (Aqua Feel) எனும் நவீன ரக குளியல் தொட்டியை சந்தையில் அறிமுகப்படுத்தியவருமான தொழிலதிபர் திரு. மனோஜ்குமாரை (Manoj Kumar -www.aquafeel.in ) சந்தித்து விளக்கம் கேட்டோம். 

 

Aquafeel Water dub

 

இது தொடர்பாக அவர் பேசுகையில், ”பாத் டப் எனும் குளியல் தொட்டியில் குளிப்பது அதிகரித்து வருகிறது. ஷவர் எனப்படும் செயற்கை நீரூற்றில் நீராடுவது புத்துணர்வை தரும் என்றாலும், தற்போது அனைத்து பிரிவு மக்களும் தங்களுடைய இல்லங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் குளியல் தொட்டியை அத்தியாவசிய பொருளாக கருதி வாங்குகிறார்கள். மேலும் அவர்களின் தேவைக்கேற்பவும். இடவசதிக்கு ஏற்பவும் நாங்கள் பிரத்யேகமாக குளியல் தொட்டியை வடிவமைத்து தருகிறோம். வீடுகளுக்கு மட்டுமல்லாமல் நட்சத்திர ஹோட்டல்களுக்கும், அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் வாட்டர் மசாஜ் குளியல் தொட்டிகளையும் நாங்கள் வடிவமைத்து தருகிறோம். 

 

இத்துறையில் 20 ஆண்டுகால தொழில்நுட்ப அனுபவம் பெற்றவர்களால் வடிவமைக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் எங்களுடைய  அக்வா ஃபீல் எனும் வணிக முத்திரையை ஏழு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தினோம். தற்போது வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். 

 

Aquafeel Water dub

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் வீட்டுக்கு உபயோக மற்றும் கட்டுப்பாடு பொருட்களுக்கான கண்காட்சியில் எங்களது நிறுவனத்தை பிரபலப்படுத்தும் வகையில் கலந்து கொண்டு வருகிறோம். 

 

எங்களது நிறுவனத்தின் குளியல் தொட்டிகளை இணையதளம் மூலமாக நீங்கள் பெற இயலும். மேலும் இந்திய மதிப்பில் 30,000 ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாய் வரை குளியல் தொட்டியின் வகைகள் இருக்கிறது. 

 

Aquafeel Water dub

 

நாங்கள் சிறிய வடிவிலான நீச்சல் குளத்தையும் குறைவான கட்டணத்தில் தரமாக அமைத்து தருகிறோம். மேலும் எங்களிடம் வாங்கும் நவீன ரக குளியல் தொட்டிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை உத்திரவாதம் அளிக்கிறோம். அந்த காலகட்டத்தில் சேவைகளையும் இலவசமாக வழங்கி வருகிறோம்.

 

நவீன குளியல் தொட்டிகளை விற்பனை செய்வதுடன், இத்தகைய குளியல் தொட்டிகளுக்கான கட்டண சேவையையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.” என்றார். 

 

Aquafeel Water dub

 

முற்றிலும் வெண்மை நிறத்தில் மட்டுமே அக்வா ஃபீல் நிறுவனத்தின் குளியல் தொட்டிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன என்பதும், இத்தகைய நவீன ரக  தொட்டிகள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கிடைப்பதால் இதற்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த எண்ணை 9791470939 தொடர்பு கொள்ளவும். வணிக ரீதியான ஆலோசனைகளையும் ,விளக்கங்களையும் பெற Email : Manojkumar221981@gmail.com இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

 

Aquafeel Water dub

Recent Gallery