இளைஞர்களுக்கு முன் உதாரணமாகவும், நல்ல வழிகாட்டியாகவும் திகழும் டாக்டர்.ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes) சமூக ஊடக வலைத்தளங்கள் மூலமாக பல நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். சமுதாயத்தை வழி நடத்துவதற்காக ஆற்றலும், திறனும் மிகுந்த ஒரு மாபெரும் சக்தியாகவும் திகழ்கிறார்.
பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வருவதோடு, பல தளங்களில் திறம்பட பணியாற்றி வரும் டாக்டர்.ஷீபா லூர்தஸ், பற்றிய வியக்க வைக்கும் பல விஷயங்கள் இருக்க, சில முக்கியமான தகவல்கள் இதோ,
குழந்தைகள் நல உளவியலாளர், சமூக சீர்திருத்தவாதி, சமூக செயற்பாட்டாளர், முன்னாள் மிஸ் தமிழ்நாடு, தொலைக்காட்சி விவாத பேச்சாளர், அரசியல் விமர்சகர், பெண்ணுரிமை இயக்கவாதி, கவிஞர், எழுத்தாளர், ஆளுமை மேம்பாட்டு பயிற்றுனர், சுய முன்னேற்ற பேச்சாளர், தத்துவவாதி, குருதி நன்கொடையாளர், உடல் தானம் செய்திருப்பவர், மேற்கத்திய நடனக் கலைஞர், வங்கியாளர் / நிதி சேவையாளர், இது மட்டும் அல்லாமல் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION) இந்தியா பவுண்டேஷன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் எனும் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், லயன்ஸ் கிளப் ஆப் சென்னை ஒன்றுபட்ட சமாரிட்டன்ஸ் எனும் அமைப்பின் தலைவர், சர்வதேச அளவிலான குழந்தைகளின் உளவியல் சிகிச்சை நிபுணர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டு பிரிவின் புரவலர், தொழில் முறையிலான உளவியல் ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், அகாடமி ஆப் பிசியோதெரபிஸ்ட் எனும் அமைப்பின் உறுப்பினர் மற்றும் இந்த அமைப்பின் சார்பில் வெளியாகும் இதழில் கட்டுரைகளை எழுதியவர் மற்றும் புதிய ஆய்வுகளை வழங்கியவர்.
தொழில் முறையிலான உளவியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர், ஒய் எம் சி ஏ எனும் சேவை அமைப்பின் தன்னார்வத் தொண்டர் மற்றும் ஆயுட்கால உறுப்பினர், நாரத கான சபா எனும் கலை இலக்கிய அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர், குழந்தை தொழிலாளர்கள் குறித்த ஆவண படத்தினை இயக்கி, சிறந்த ஆவண படத்திற்காக பிரபல இயக்குநர் ஹரிஹரனிடமிருந்து விருதினை பெற்றவர்.
அனாதை ஆசிரமம்/ ஆதரவற்றவர்களுக்கான காப்பகம்/ புணர்வாழ்வு மையங்கள் /குடிசை வாழ் குழந்தைகளுக்குக்கான கல்வி வழங்குதல் என பல்வேறு தளங்களில் ஈடு இணையற்ற முறையில் செயல்படும் சமூக செயற்பாட்டாளர் என சர்வதேச அளவில் அறியப்பட்டவர்.
45க்கும் அதிகமான நாடுகளுக்கு பயணித்து ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் கலாச்சாரம் மற்றும் உறவு குறித்த ஆய்வினை மேற்கொண்டவர்.
இப்படி இவரின் சேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
இதனுடன் மட்டும் நில்லாமல், ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை சென்னையில் உள்ள 200 குடிசை வாழ் குழந்தைகளின் கல்விக்காக நிதிகளை சேகரித்து வழங்கி வருபவர்.
இவர் உருவாக்கி நடத்தி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு இந்தியா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் குடிசை பகுதி வாழ் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக எச்ஐவி எனும் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, அவர்களுக்கான வாழ்விடம் ஆகியவற்றை உருவாக்கி வருகிறார். மேலும் வீதியோரத்தில் ஆதரவற்று உருகுலைந்து கிடக்கும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து, பராமரித்து வருவதற்கான திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
கிருபாய் மறுவாழ்வு மையம் என்ற அமைப்புடன் இணைந்து மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை திருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார்.
'தி குயின் ஃபீஸ் ' எனும் குழுமத்தை உருவாக்கி அதில் பெண்கள் மேம்பாட்டிற்கான.. அவர்களின் தனித் திறன் மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
மனிதம் அசோசியேஷன் சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான 'விடியலை நோக்கி' மற்றும் 'ஹேப்பினஸ் பிஹைன்ட் டிராஜிடி' எனும் ஆவண படங்களை இயக்கி, சிறந்த படைப்பிற்கான விருதினை வென்றிருக்கிறார்.
மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தாக்குதலின் போது அது தொடர்பான விழிப்புணர்விற்காக ஊடகவியலாளரை சந்திப்பினை ஒருங்கிணைத்தவர்.
வெளிநாடுகளில் எதிர்பாராமல் பாதிப்பிற்கு உள்ளாகும்/ தாக்குதலுக்குள்ளாகும் இந்தியர்களுக்காக.. அவர்களின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஊடக ஒருங்கிணைப்பை மேற்கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக பாடுபட்டிருக்கிறார்.
இவரின் சாதனை பட்டியல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமூகத்திற்காக.. சமூக மேம்பாட்டிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) போன்றவர்கள்.. இந்த டிஜிட்டல் தலைமுறையினர் கொண்டாட வேண்டிய இளம் தலைவர். அவர்களுடைய பாணியில் விவரிக்க வேண்டும் என்றால் இவர் செய்து வரும் பணிக்காக மில்லியன் கணக்கிலான லைக்ஸ்களையும், பில்லியன் கணக்கிலான ஃபாலோயர்களையும் கொண்டிருக்க வேண்டும்.
இவரின் சாதனைகளை தொடர்ந்து கேட்கும் போது வள்ளுவன் உரைத்த 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை /மகளை சான்றோன் என கேட்ட தாய்' என்ற இரண்டடி திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது.
இதனிடையே அவர் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் நாட்டு மரங்களை இயற்கை சுற்றுப்புற சூழலியலில் விருப்பமுள்ளவர்களுடன் இணைந்து பதியமிடுகிறார் என்பதும், இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து குருதி நன்கொடை கண்தானம் உடல் உறுப்பு தானம் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் ஆயிரம் கணக்கிலானவர்கள் இது தொடர்பான உறுதிமொழி சான்றினை ஒப்படைப்பதற்கு வித்திட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.