Latest News :

தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சி!

39779f360f23500866e7424e400df01b.jpg

ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (ஜிடோ) வழங்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சியான ‘JITOFOOD AND WELLNESS STORY’-ஐ சென்னையில் நடைபெற்றது. செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, 2023 என இரண்டு நாட்கள்  சென்னை  ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்றது.

 

ஜிடோ சர்வதேச வர்த்தக அமைப்பு (JITO) முக்கியமான ஒரு உலகளாவிய சங்கமாக உள்ளது. இது 15,000 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஜெயின் வணிகர்கள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் என பலதரப்பட்ட முக்கிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 

 

ஜிடோவுக்குள், ஜிடோ லேடீஸ் விங் ஒரு தன்னிறைவுப் பெற்ற பிரிவாக இயங்கி வருகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலக அளவில் பெண் தொழில் முனைவோரை வளர்ப்பதில் ஆர்வத்துடன் உறுதி பூண்டுள்ளது.‘ஃபுட் அண்ட் வெல்னஸ் ஸ்டோரி’ அவர்களின் சமீபத்திய முயற்சி. இது சென்னையின் முதன்மையான உணவு வர்த்தக கண்காட்சியாக நிச்சயம் மாறும். புதுமை, பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைப் போற்றும் வகையில், இந்த நிகழ்வு உணவுத் துறையின் ஒரு முக்கிய மையமாக செயல்படும். 

 

உணவு மற்றும் ஊட்டச்சத்து உற்பத்தி, சந்தைப்படுத்துதல், விநியோகம் மற்றும் சில்லறை வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இணையற்ற தளத்தை வழங்குவதே அவர்களின் நோக்கம். இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 

 

இந்த நிகழ்வின் விருந்தினர்கள் பட்டியலில் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், புகழ்பெற்ற பிரபலங்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், திறமையான பேச்சாளர்கள், தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மதிப்புள்ள நபர்கள், உயர்மட்ட சமையல் கலைஞர்கள் மற்றும் தேசம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற பிரபல மாஸ்டர் செஃப்களும் கலந்துக்கொண்டனர். 

 

இந்த கண்காட்சிக்கு 10,000 மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்ற இந்த கண்காட்சியில் இருந்து கிடைக்கும் வருமானம் பெண் தொழில் முனைவோரின் திறன்களை மேம்படுத்துவதற்கும், வீட்டிலிருந்து தொழில் முனைவோர் அல்லது சிறிய அளவில் பிசினஸ் தொடங்கும் பெண்களுக்கு வட்டியில்லா  மூலதனத்தை வழங்குவதற்கும் ஒதுக்கப்படும்.

Recent Gallery