’H2O ஹேண்டிகேப் டு ஆபர்ச்சூனிட்டிஸ் - அபயா ஸ்ரீஸ்ரீமல் ஜெயின் வாழ்க்கை வரலாறு’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அபயா ஸ்ரீஸ்ரீமல் ஜெயின் வாழ்க்கை வரலாறு புத்தகம் மற்றும் ’முல்யத்மகா அர்த்தசாஸ்த்ரா’ ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயா நகரில் உள்ள ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் கல்லூரியில் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பத்மபூஷன் விருது பெற்ற ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஆர். தியாகராஜன், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ’H2O ஹேண்டிகேப் டு ஆபர்ச்சூனிட்டிஸ் - அபயா ஸ்ரீஸ்ரீமல் ஜெயின் வாழ்க்கை வரலாறு’ புத்தகத்தை வெளியிட்டார்.
முனுத் குழுமம் மற்றும் ஜிட்டோவின் நிர்வாக இயக்குநராகவும், அபேக்ஸின் இயக்குனராகவும் இருக்கும் ஸ்ரீ ஜஸ்வந்த் முனோத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ’முல்யத்மகா அர்த்தசாஸ்த்ரா’ புத்தகத்தை வெளியிட்டார்.
ஸ்ரீ அபயா ஸ்ரீஸ்ரீமல் ஜெயின், ஸ்ரீ எஸ்.எஸ்.ஜெயின் கல்விச் சங்கத்தின் கெளரவ பொதுச் செயலாளராகவும், முன்னணி தொழிலதிபர் மற்றும் சமூகக் கல்வியாளர் ஆவார். இந்தியாவில் ’லைஃப்செல்’ என்ற பெயரில் கார்ட் ப்ளட் ஸ்டெம் செல் பேங்கிங் என்ற கருத்தை முன்னோடியாகக் கொண்டு வந்தார். அவர் ஒரு சிறந்த நன்கொடையாளர் மற்றும் சமூகம் மற்றும் கல்வியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவரது அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில், மதிப்பிற்குரிய எழுத்தாளரும் கின்னஸ் உலக சாதனை விருது பெற்றவருமான ஸ்ரீ சஞ்சய் லூனியா, ’H2O - வாய்ப்புகளுக்கான குறைபாடு : அபயா ஸ்ரீஸ்ரீமல் ஜெயின் வாழ்க்கைக் கதை’ என்ற அழுத்தமான சுயசரிதையை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.