Latest News :

தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் புதிய நீதிக்கட்சி! - ஏ.சி.சண்முகத்திடம் வாழ்த்து பெற்ற அருளாளன்

c780b8ec3918cae611433a50a919c3e8.jpg

பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கும் புதிய நீதிக்கட்சி, தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ மா.பா.சாரதி அவர்களின் பேரனும், வேலூர் தொழிலதிபருமான சேட்டு என்கிற அருளாளன், புதிய நீதிக்கட்சியுடன் இணைந்து தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சமீபத்தில், ஏ.சி.சண்முகம் அவர்களை மரியாதை நிமித்தமாக அருளாளன் அவர்கள் சந்தித்தார்.

 

இந்த சந்திப்பின் போது, வேலூர் கோட்டையில் தாமரை மலரப்போவது உறுதி, என்ற நம்பிக்கையோடு தேர்தல் பணியாற்றி வரும் புதிய நீதிக்கட்சியினருக்கு, அருளாளன் அவர்களின் தீவிரமான தேர்தல் பணி மேலும் உற்சாகத்தை கொடுத்திருப்பதாக கூறிய ஏ.சி.சண்முகம், அருளாளன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

 

AC Shanmugam and Arulalan

 

இந்த சந்திப்பின் போது கராத்தே ரமேஷ் உடன் இருந்தார்.

Recent Gallery