Latest News :

திரி

croppedImg_1961506006.jpeg

Casting : Ashwin, Swathi, Jayaprakash, Daniel, AL Azhagappan, Arjay

Directed By : Ashok Amirtharaj

Music By : Ajesh, S. Thaman

Produced By : Seashore Gold Productions, Sri Annamalaiyar Movies

பள்ளி ஆசிரியரான ஜெயப்பிரகாஷ், வாழ்க்கையில் முக்கியமானது ஒழுக்கம் தான் என்று நினைப்பதோடு, அதன்படியே வாழ்ந்து வருகிறார். தனது பிள்ளைகளையும் அப்படியே வளர்க்கிறார். அப்பாவின் எண்ணத்திற்கு ஏற்ப, அனைத்திலும் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் அவரது மகன் ஹீரோ அஸ்வின், தனது கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து சான்றிதழ் வாங்கும் போது, அதில் அவரது ஒழுக்கத்தில் குறை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

கல்லூரியில் எந்தவித பிரச்சினைக்கும் போக அஸ்வின், தனது சான்றிதழில் ஒழுக்கத்திற்கு குறை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாவதோடு, அதற்கான காரணத்தை அறிய கல்லூரி நிர்வாகத்திடம் முறையிடும் போது தான் தெரிகிறது, அவர் கல்லூரி உரிமையாளரின் மகனால் பழிவாங்க பட்டிருக்கிறார் என்று. தனது தந்தைக்கு தெரிவதற்கு முன்பாக சான்றிதழை மாற்ற முயற்சிக்கும் அஸ்வின், கல்லூரி உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்க செல்லும் போது, அவரை அடியாட்களை வைத்து அடிப்பதோடு, அஸ்வினின் குடும்பத்திற்கே தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார் அந்த கல்லூரி உரிமையாளர். பொருத்தது போதும், என்ற முடிவுக்கு வரும் அஸ்வின், அரசியல் மற்றும் ரவுடி பலம் கொண்ட அந்த கல்லூரி உரிமையாளரை திருப்பி அடிக்க முடிவு செய்வதோடு, அவரது சாம்ராஜ்யத்தையே தனது படிப்பு அறிவால் சாய்ப்பதற்கான வேலையில் இறங்க, அதில் அவர் ஜெயித்தாரா இல்லையா, அந்த கல்லூரி உரிமையாளருக்கும் அஸ்வினுக்கும் இடையே இருக்கும் பிரச்சினை என்ன? என்பது தான் ‘திரி’ படத்தின் கதை.

 

கல்வியை மையமாக வைத்து பல படங்கள் வந்தாலும் இப்படத்தின் திரைக்கதை சற்று வித்தியாசமான பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

 

சாக்லெட் பாய் வகையராவை சேர்ந்த அஸ்வின் இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துகிறார். முடிந்த வரை ஹீரோயின் சுவாதியை படத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக காட்ட இயக்குநர் பெரும் பாடுபட்டிருக்கிறார்.

 

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது மகனாக நடித்துள்ள அர்ஜயின் நடிப்பும் அசத்தல். அஸ்வினின் அப்பாவாக நடித்துள்ள ஜெயபிரகாஷ் எப்போதும் போல தனது வேடத்தை சிறப்பு படுத்தியிருக்கிறார்.

 

இசை, ஒளிப்பதிவு ஆகியவை சுமாராக இருந்தாலும், திரைக்கதை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் இருக்கிறது. மொத்தத்தில் இந்த ‘திரி’ நெருப்பு போல பிரகாசிக்கிறது.

Recent Gallery