Casting : Vijay Sathya, Sherin, A.Venkatesh, Vanitha Vijayakumar, Samyuktha, Iman Annachi, Vijay TV Bala, Gnanasamandam, Ammu, Lollu Saba Manohar, Mukkuthi Murugan
Directed By : A.Venkatesh
Music By : Amrish
Produced By : Golden Eagle Studio - Covai Balasubramaniyam
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது, எதிர்பாராத பிரச்சனை ஒன்று அவர்களை துரத்துகிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக விஜய் சத்யா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ஒரு பக்கம் வில்லன் கோஷ்ட்டி மறுபக்கம் காவல்துறை துரத்த, குடும்பத்துடன் வாழ்வா...சாவா...!, என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா, அதில் இருந்து எப்படி மீள்கிறார்? என்பதை கமர்ஷியலாகவும், திரில்லராகவும் சொல்வது தான் ‘தில் ராஜா’.
இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருந்தாலும், தனது பலமான கமர்ஷியல் ஃபார்மூலாவை பக்கவாக கையாண்டு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக மட்டும் இன்றி திரில்லர் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் என்று அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்துகிறார். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பதற்காக போருபவர், தன்னை சுற்றி பதற்றமான சூழல் இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
விஜய் சத்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஷெரின், பாடல்களுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் நாயகியாக வலம் வருகிறார்.
அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் ஆரவாரம் செய்யாமல் மிரட்டுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வேலை இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தாவின் காக்கி சட்டை சீருடையை மறந்து அவரை ரசிக்கும் அளவுக்கு கவர்ச்சியாக வலம் வருகிறார். கடமை தவறாத காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் அளவுக்கு அதிகமான மேக்கப் போட்டு எடுப்பாக வலம் வருகிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜய் டிவி பாலாவின் நையாண்டி வசனங்கள் சில சிரிக்க வைக்கிறது. அவருக்கு ஈடுகொடுத்து கவுண்டர் அடிக்கும் இமான் அண்ணாச்சியின் காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை.
கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் முகம் காட்டும் வேலையை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணாவின் கேமரா சேசிங் காட்சிகளை வேகமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்ஷன் காட்சிகளை அமர்க்களமாகவும் படமாக்கியிருக்கிறது.
அம்ரீஷ் இசையில், நெல்லை ஜெயந்தன் மற்றும் கலைகுமார் வரிகளில் பாடல்கள் அனைத்தும் அக்மார்க் கமர்ஷியல் அம்சங்கள். பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படம் என்றாலும் படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், நான் லீனர் முறையில் காட்சிகளை தொகுத்து, படம் முழுவதையும் விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைத்திருக்கிறார்.
கதையையும், கதாநாயகனையும் மக்களுக்கு பிடித்தவாறு கையாளக்கூடிய இயக்குநர்களில் முக்கியமானவரான இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தனது வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் ஃபார்மூலாவுடன் திரைக்கதை அமைத்திருந்தாலும், அதில் திரில்லர் என்ற கூடுதல் அம்சத்தை சேர்த்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
நாயகனுக்கு ஏற்பட்ட சிக்கல், அதில் நாயகனும், அவரது குடும்பமும் சிக்கிக்கொண்டது எப்படி?, அதில் இருந்து மீள்வதற்கான அவர்களது போராட்டம், ஆகியவற்றை பல திருப்பங்களுடன் சொல்லி படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கமர்ஷியல் ரசிகர்களை திருப்திப்படுத்தும் முழுமையான ஆக்ஷன் திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘தில் ராஜா’ நிச்சயம் ஜெயிப்பார்.
ரேட்டிங் 3/5