Latest News :

‘சொல்லிவிடவா’ விமர்சனம்

adfd2bbd6c50d3f8a09f8361c9b75970.jpg

Casting : Chandan Kumar, Aishwarya Arjun, Prakash Raj

Directed By : Arjun

Music By : Jassie Gift

Produced By : Niveditha Arjun

 

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் படமான ‘சொல்லிவிடவா’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

ஹீரோ சந்தன் குமாரும், ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜுனும், வெவ்வேறு சேனல்களில் பணி புரிந்தாலும், தங்களது துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு திருமணம் நிச்சயம் ஆன நிலையில், கார்கிலில் நடக்கும் போரில் நேரடியாக செய்தி சேகரிக்க செல்ல, ஹீரோவும் கார்கிலுக்கு செல்கிறார்.

 

கார்கிலில் நடக்கும் யுத்தத்தில் நேரடியாக செய்தி சேகரிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும், ஏற்கனவே திருமணமான பெண் என்பதால் ஹீரோ தனது காதலை சொல்லாமல் இருக்க, ஹீரோயினும் அவரது மனநிலையோடு இருக்கிறார். இப்படி இருவருக்கும் இடையே நடக்கும் காதல் யுத்தத்தில் இந்த ஜோடி வெற்றி பெற்றதா இல்லையா, என்பது தான் ‘சொல்லிவிடவா’ படத்தின் கதை.

 

அர்ஜூன் படம் என்றாலே தேசியப்பற்றும், அதிரடியான ஆக்‌ஷனுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் இந்த படத்தில் அவை இரண்டையும் குறைத்துக்கொண்ட அர்ஜூன், காதலை மட்டுமே முன் நிறுத்தியிருக்கிறார். இருந்தாலும், நாட்டுக்கு உயிரை தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை ரசிகர்கள் கண் கலங்க வைக்கும் அளவுக்கு காட்சியாக்கியிருக்கிறார்.

 

வேறு ஒருவருக்கு நிச்சயமான ஹீரோயினை காதலிக்கும் ஹீரோ, என்ற கான்சப்ட் அதர பழசு மட்டும் அல்ல, தமிழ் சினிமாவே மறந்துப்போன ஒன்று. அதை மீண்டும் தூசி தட்டியிருக்கும் அர்ஜூன், ஹீரோ சந்தன் குமாரை ஜெராக்ஸ் அர்ஜூனாகவே மாற்றியிருக்கிறார். சந்தன் குமாரின் நடிப்பு, நடனம், ஆக்‌ஷன் என்று அனைத்தும் அர்ஜூன் செய்வது போலவே இருக்கிறது.

 

ஐஸ்வர்யா அர்ஜூன், தனது அறிமுகப் படத்தை விட இந்த படத்தில் ரொம்ப நன்றாகவே முன்னேற்றம் அடைந்திருக்கிறார். துறு துறுவென்ற நடிப்பு, அட்டகாசமான நடனம் என்று பர்பெக்ட் கமர்ஷியல் ஹீரோயினாக ஐஸ்வர்யா வலம் வந்திருக்கிறார்.

 

சதிஷ், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு என்று காமெடிக்காக பலர் இருந்தாலும், படத்தில் காமெடி ரொம்பவே டிரையாகவே இருக்கிறது. 

 

எச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவு பாடல்களை கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், ஆக்‌ஷன் காட்சிகளையும், போர் காட்சிகளையும் பரபரப்பாகவும் காட்டியிருக்கிரது. ஜாஸி கிப்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும், வார்த்தைகள் புரியும் ரகமாகவும் இருக்கிறது.

 

என்ன தான் காதல் படமக இருந்தாலும், தேசத்தைப் பற்றியும், தேசத்துக்காக பாடுபடும் ராணுவ வீரர்கள் பற்றியும் தனது ஒவ்வொரு படத்திலும் சொல்லும் இயக்குநர் அர்ஜூனுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். இருந்தாலும், ஒரு இயக்குநராக காதல் கதையை கையாள அர்ஜூன் ரொம்பவே தடுமாறியிருக்கிறார். 

 

ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்துக்கட்டி ரசிகர்களின் பல்ஸ் பார்த்து படம் கொடுக்கும் திறன் படைத்த அர்ஜூன், இப்படி ஒரு காதல் படத்தை கையில் எடுக்க காரணம், தனது மகளின் திறமையை காட்டுவதற்காக தான், என்பது படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘சொல்லிவிடவா’ வை ரசிகர்களுக்காக அல்லாமல் தனது மகளுக்காகவே அர்ஜூன் இயக்கியிருக்கிறார்.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery