Casting : Ridley Scott, Michael Pruss, Douglas Wick, Lucy Fisher, Walter F. Parkes, Laurie MacDonald, David Franzoni
Directed By : Ridley Scott
Music By : Harry Gregson-Williams
Produced By : Scott Free Productions, Red Wagon Entertainment, Parkes+MacDonald Image Nation, Paramount Pictures
ரோமானியப் பேரரசை மையமாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டு வெளியான ‘கிளாடியேட்டர்’ படத்தின் கதைப்படி, வஞ்சிக்கப்பட்ட ரோமானியப் படைத்தலைவன் மேக்சிமஸ், சிறையில் அடிமையாக்கப்பட்டு பிறகு தனது வீரத்தின் மூலம் கிளாடியேட்டராகிறார். விருந்து, கேளிக்கை என உல்லாசத்தில் திளைத்திருப்பதை தவிர வேறு ஏதும் செய்யாத ரோமானிய பேரரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் மேக்சிமஸ், தனது வீரத்தால் அவரை வீழ்த்தினாலும் இறுதியில் அவரும் இறந்து விட, தற்போது வெளியாகியிருக்கும் ‘கிளாடியேட்டர் 2’-வில் இறந்த நாயகன் மேக்ஸிமஸின் மகன் லூசியஸ் வெரஸ் தனது தந்தைப் போலவே ரோமானியப் படையால் கைது செய்யப்பட்டு அடிமையாக்கப்பட்டு, பிறகு கிளாடியேட்டர் ஆகிறார்.
கிளாடியேட்டர் ஆகும் ஹென்னோ என்பவர் தான் தனது மகன் என்பதை அறிந்துக் கொள்ளும் முன்னாள் ரோமானியப் பேரரசரின் மகள், ஹென்னே யார் என்பதை அவருக்கு புரிய வைப்பதோடு, அவரது தந்தை மேக்சிமஸ் உள்ளிட்ட பல வீரர்கள் சிறந்த ரோமானிய ஆட்சிக்காக உயிரிழந்ததை நினைவுக்கூறுகிறார். தந்தை பற்றியும், அவர்கள் உருவாக்க நினைத்த புதிய ரோமுக்காகவும், ரோமானிய பேரரசை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடும் லூசியஸ், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை முதல் பாகத்தின் வழியிலேயே சொல்வது தான் ‘கிளாடியேட்டர் 2’.
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியான ‘கிளாடியேட்டர்’ முதல் பாகம் ரோமானியப் பேரரசு மற்றும் கிளாடியேட்டரின் சண்டைக்காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தது போலவே இந்த இரண்டாம் பாகமும் பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தாலும், முதல் பாகத்தின் சண்டைக்காட்சிகளில் இருந்த உயிர், இரண்டாம் பாகத்தின் சண்டைக்காட்சிகளில் இல்லை.
லூசியஸாக நடித்திருக்கும் பால் மெஸ்கலும், மார்கஸ் அகாக்யூஸாக நடித்திருக்கும் பெட்ரோ பாஸ்கல், மேக்ரினஸாக நடித்திருக்கும் டென்செல் வாஷிங்டன், லூஸ்லியாவாக நடித்திருக்கும் கோனி நெய்ல்சன் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளும் வழக்கம் போல் தரமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கிறது.
கிளாடியேட்டரின் சண்டைக்காட்சிகள் வழக்கமான பிரமாண்ட அரங்கத்தில் நடைபெற்றாலும், நாய் மற்றும் குரங்கை இணைத்த ஒரு விலங்கு, காண்டாமிருகத்தின் மீது வரும் வீரருடான மோதல், மற்றும் சுரா மீன்கள் உலா வரும் நீர் நிலையில் ஒரு மோதல் என சண்டைக்காட்சிகளை வித்தியாசமாக வடிவமைத்திருந்தாலும், அதில் நாயகனின் ஈடுபட்டை அழுத்தமாக வெளிக்காட்டாமல் மேலோட்டமாக காட்டியிருப்பது, ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்க தவறியிருக்கிறது.
ரோமானியப் பேரரசில் இருந்த கிளாடியேட்டர்கள் பற்றி முதல் பாகத்தில் மிக நேர்த்தியாக சொன்ன இயக்குநர் ரிட்லி ஸ்காட், இரண்டாம் பாகத்திலும் அதே கிளாடியேட்டர் மற்றும் அவரது வீர சாகசங்களை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்திருந்தாலும், ரோமப் பேரரசுக்கு எதிரான மக்கள் புரட்சி, அதன் மூலம் பேரரசின் ஆட்சியை கைப்பற்றும் முன்னாள் அடிமையின் சதித்திட்டம் உள்ளிட்டவைகளை திரைக்கதையில் இணைத்து இதுவரை உயிர் விட்ட ரோம் வீரர்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘கிளாடியேட்டர் 2’ அதே மைதானம், அதே ஆட்டம்.
ரேட்டிங் 3/5