Latest News :

’சைலண்ட்’ திரைப்பட விமர்சனம்

319cf44919b7f691b5cfa9b308937b33.jpg

Casting : Samaya Murali, Ganesha Pandi, Arathya, Murali Radhakrishnan, Namitha Marimuthu

Directed By : Ganesha Pandi

Music By : Samaya Murali and Ravi.K

Produced By : SR Dream Studios - S Ram Prakash

 

ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும் போது அதே பாணியில் பல கொலைகள் நடக்கிறது. இந்த கொலை வழக்கின் பின்னணியில் ஒரு பெண் இருப்பதை காவல்துறை கண்டறியும் போது, அது பெண் அல்ல ஆண் என்ற உண்மை தெரிய வருகிறது. அந்த ஆண் யார்?, எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்? என்பதை சஸ்பென்ஸாக மட்டும் இன்றி சமூக அக்கறையோடு சொல்வது தான் ‘சைலண்ட்’.

 

புவனேஸ்வரி மற்றும் புவனேஸ்வரன் என இரண்டு கதாபாத்திரங்களில் ஆண் மற்றும் பெண்ணாக நடித்திருக்கும் இயக்குநர் கணேஷா பாண்டி, தோற்றத்திலும், நடிப்பிலும் மிரட்டுகிறார்.

 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமய முரளி கம்பீரமாக வலம் வருகிறார்.  ஆரத்யா, முரளி ராதாகிருஷ்ணன், நமீதா மாரிமுத்து என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

சமய முரளியின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருப்பதோடு, திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் வரிகள் அமைந்திருக்கிறது. ரவி.கே-வின் பின்னணி இசை அளவு.

 

ஒளிப்பதிவாளர் சேயோன் முரளியின் பணி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. சரண் சண்முகத்தின் படத்தொகுப்பு நேர்த்தி.

 

தொழில்நுட்ப வளர்ச்சி மிக்க இவ்வுலகில் மூன்றாம் பாலினத்தவரை பார்க்கும் பார்வை மட்டும் மாறவில்லை என்ற கருத்தை தனது திரைக்கதையின் மூலம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் சமய முரளி, அதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சுமாரஸ்யமாகவும் கொடுத்துள்ளார்.

 

படத்தை இயக்கியிருக்கும் கணேஷா பாண்டி, அழுத்தமான கதைக்களமாக இருந்தாலும், அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய வகையில் விறுவிறுப்பான மற்றும் திருப்பங்கள் நிறைந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இயக்கியிருக்கிறார்.

 

படத்தின் சில இடங்களில் குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொன்னதோடு, சமூக அக்கறையோடு அதை கையாண்டிருக்கும் இயக்குநர் கணேஷா பாண்டி, ஒவ்வொரு கொலைகள் நடக்கும் போதும், கொலையாளி யார்? என்பதை யூகிக்க முடியான சஸ்பென்ஸாக கையாண்டிருப்பதோடு, கொலையாளியின் பின்னணியை வெளிக்காட்டிய விதம் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.

 

வழக்கமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் தான் என்றாலும், அதை சொன்ன விதத்தில் வித்தியாசத்தை காட்டியிருப்பதோடு, அதை சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் கணேஷ பாண்டியை தாராளமாக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், ‘சைலண்ட்’ கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery