Casting : Ajay Raj, Akrithi Singh, Riyamikka, Vishwa, shaan, Prabhujith
Directed By : Sajo Sundar
Music By : Johan
Produced By : Ajitha Sajo
இன்றைய இணைய உலகில், எதுவுமே பர்சனலும் இல்லை, பாதுகாப்பும் இல்லை என்பதை உணர்த்தும் படமே ‘எக்ஸ் வீடியோஸ்’.
பத்திரிகை நிருபரான மனோஜ், ஆபாச இணையதளங்களை தடை செய்வது பற்றி மக்களிடம் கருத்து கேட்க, அப்போது ஒருவர் “முதலில் அந்த இணையதளங்களை பார்த்துவிட்டு, பிறகு கருத்து கேட்க வா” என்று கூறுகிறார். உடனே ஆபாச இனணையதளங்களை பார்வையிடம் ஹீரோவுக்கு பெரும் அதிர்ச்சி. அவரது நண்பர் பிரசன்னா ஷெட்டியின் மனைவி அக்ரித்தியின் நிர்வாண் வீடியோ ஒரு இணையதளத்தில் இருக்கிறது. உடனே மற்றொரு நண்பரான டேனியுடன் சேர்ந்து, விஷயத்தை அங்கித்திடம் கூறுகிறார்கள். மனைவி எவ்வளவு மறுத்தும், தான் தான் அந்த வீடியோவை எடுத்ததாகக் கூறி அங்கித் கதறுகிறார். தனக்கு தெரியாமல் எப்படி அந்த வீடியோ வெளியே வந்தது என குழப்பமடையும் அவர், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
நண்பனின் மரணத்தினால் பாதிப்படையும் மனோஜும், டேனியும் போலீஸ் அதிகாரி ஷாணுடன் இணைந்து, அந்த வீடியோ எப்படி ஆபாச இணையதளத்தில் அப்லோட் செய்யப்படது என துப்பறிய தொடங்கும் போது, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடை வைக்கும் தகவல்கள் கிடைக்க, இறுதியில் மென்பொறியாளர்களான பிரபுஜித் தலைமையிலான ஐவர் கூட்டணி தான் அந்த ஆபாச இணையதளத்தை நடத்துகிறது, என்பதை ஹீரோ கண்டுபிடிக்கிறார்.
சாமானிய மக்களின் அந்தரங்கங்களை அவர்களுக்கே தெரியாமல், ஆபாசமாக்கி இணையதளம் மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கும் அந்த ஐவர் கூட்டணியை, ஹீரோ மனோஜ் எப்படி கையும் களவுமாக பிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
முதல் படத்திலேயே சமூக பிரச்சினையை கையில் எடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சஜோ சுந்தர், சைபர் கொள்ளையர்கள் சாமாணிய மக்களின் சிறு பலவீனங்களை பயன்படுத்தி எப்படி பணம் பறிக்கிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
கபாலி விஷ்வா மட்டுமே தெரிந்த முகம். ஹீரோ உள்ளிட்ட மற்ற அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அவர்களது நடிப்பு அவர்களை அனுபவசாலிகளாக காட்டுகிறது. ஹீரோயினாக நடித்திருக்கும் அக்ரித்தி, ரியாமிக்கா ஆகியோரும் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசை மூலம் கவனிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜோஹன். வின்செண்ட் அமல்ராஜின் ஒளிப்பதிவும், ஆனந்தலிங்க குமாரின் படத்தொகுப்பும் ஓகே தான்.
இணைய உலகின் அபாயத்தை ரொம்ப துல்லியமாக காட்டியிருக்கும் இயக்குநர், மக்கள் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லியிருப்பது திரைக்கதைக்கு விறுவிறுப்பை சேர்த்திருந்தாலும், படத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் வருவதால், படம் பார்ப்பவர்களின் கவனம் சிதறுகிறது.
நனமது செல்போனில் இருப்பவை நமக்கு மட்டுமே தெரிந்தவை, என்று அஜாக்கிரதையாக இருப்பது தவறு, என்பதை படம் பார்ப்பவர்கள் உணரும் வகையில் காட்சிகளை வடிவைத்திருக்கும் இயக்குநர் இன்றைய டிஜிட்டல் உலகில் சிக்கி சிதைந்துவிடாமல் இருக்க, நாம் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்பதை சொல்லிய விதத்திற்கு பாராட்டலாம்.
ஒரு சில சிறு சிறு குறைபாடுகள் படத்தில் இருந்தாலும், இணைய உலகின் அபாயங்களையும், அதில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் ரொம்ப அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த ‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தை நிச்சயம் மக்கள் பார்க்க வேண்டும்.
ஜெ.சுகுமார்