Latest News :

‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ விமர்சனம்

01fda1394911b922dc6e1219c3776522.jpg

Casting : Athvik Jalandhar, Pooja Ramakrishnan, Jogikumar, Gopalakrishnan

Directed By : R. Jayaprakash

Music By : Ganesh Raghavendra

Produced By : Lemurian thirakkalam

 

இயக்குநர், ஹீரோ என முழுக்க முழுக்க புதுமுகங்களின் முயற்சியில் உருவாகி வெளியாகியிருக்கும் இந்த ‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ எப்படி என்பதைப் பார்ப்போம்.

 

கட்டப் பஞ்சாயத்து ரவுடியான துரை பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோ அத்விக் ஜலந்தருக்கு விண்வெளிக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக சுமார் ரூ.75 கோடி செலவு ஆகும் என்பதை அறிந்துக் கொள்ளும் அவர், தனக்கு வாடிக்கையாக மாமூல் கொடுப்பவர்களை அழைத்து, ஆளுக்கு ரூ.5 கோடி தனக்கு கொடுக்க வேண்டும் என்றும், அந்த பணத்தின் மூலம் தான் என்ன செய்யப் போகிறேன், என்றும் கூறுகிறார்.

 

துரை பாண்டியின் இந்த ஆசையை அறியும் பெரிய மனிதர்கள் சிர்ப்பாய் சிரிக்க நினைத்தாலும், அவர் மீது இருக்கும் பயத்தால், அதை அடக்கிக் கொண்டு, “ஊட்டி, கொனைக்கானல், கோவா போங்க...இல்லனா அமெரிக்கா போன்ற வெளிநாட்டுக்கு கூட...போங்க...அதை விட்டுட்டு இப்படி நடக்காத ஒன்ன பத்தி ஏன் யோசிக்கிறீங்க” என்று சொன்னாலும், அதை எல்லாம் காதில் வாங்காத துரை பாண்டி, ஆளுக்கு 5 கோடி ரூபாய் கொடுத்தாக வேண்டும், என்று உத்தரவு போடுகிறார்.

 

துரை பாண்டியின் இத்தகைய செயலால் கடுப்பாகும் பெரிய மனிதர்களில் ஒரு கும்பல் அவரை போட்டு தள்ள நினைக்க, மற்றொரு கும்பல் இது குறித்து அமைச்சரிடம் முறையிட, இன்னொரு கும்பல் கத்தியின்று ரத்தம் இன்றி, துரை பாண்டியை சாய்க்க நினைக்கிறது. தனது விண்வெளிப் பயண ஆசையால், ஒட்டு அனைவரையும் பகைத்துக் கொள்ளும் துரை பாண்டியின் ஆசை நிறைவேறியதா அல்லது அவரது செயலை கோமாளித்தனம் என்று சொல்லும் பெரிய மனிதர்களின் எண்ணம் பளித்ததா, என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

 

சாதாரண கதையை அல்லது நாம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பார்த்த ஜானரை, இப்படியும் சொல்லலாம் என்று சில இயக்குநர்கள் நிரூபிப்பார்கள், அந்த வரிசையில் தான் இந்த ‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ படமும் இருக்கின்றன.

 

கிராமத்து பாணி கேங்ஸ்டார் படம் தமிழ் சினிமாவில்  பல வந்திருந்தாலும், அதை விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டு காமெடியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜெயப்பிரகாஷின் சிந்தனைக்கு சபாஷ் சொல்லியாக  வேண்டும்.

 

படத்தில் துரை பாண்டி என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஹீரோ அத்விக் ஜலந்தரை நேரில் பார்த்தால், இவரா அது! என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு நிஜத்திலும் திரையிலும் மனுஷன் என்ன மாதியான வித்தியாசமாக இருக்கிறார். துரை பாண்டி என்ற வேடத்தில் ரவுடியாக வலம் வருபவர், காமெடி, ரவுடித்தனம், பயம் என அனைத்து எக்ஸ்பிரஷன்களையும் ரொம்ப அசால்டாக வெளிப்படுத்துவதோடு, நடிப்பிலும் பயங்கர எதார்த்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் என்கவுடருக்கு பயந்து காட்டில் ஒலிந்துக்கொண்டிருக்கும் போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பும், படத்தின் ஆரம்பத்தில் காமெடி கலந்த ரவுடியாக தன்னை காட்டிக்கொள்ளும் விதமும் படத்திற்கு பெரிய தூணாக இருக்கிறார்.

 

படத்தில் ஹீரோயின் இல்லை, முக்கிய குணச்சித்திர நடிகர்கள் இல்லை. ஆனால், படத்தில் வரும் புதுமுகங்கள் ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் நம் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொள்கிறார்கள். அதிலும், திருமணமாகியும் துரை பாண்டியுடன் உறவு வைத்திருக்கும் அவரது முன்னாள் காதலி வேடம் எல்லாம், செம செலக்‌ஷன். அதிலும், கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துரை பாண்டியின் இடத்தைப் பிடிக்கும் மூத்த ரவுடி தனது மகனுக்கு துரை பாண்டியை எதிர்ப்பதற்காக கொடுக்கும் பயிற்சி காட்சிகள் அனைத்தும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. 

 

சதாரணமான கதையை, சாதாரண மேக்கிங்கோடு கையாண்டிருக்கும் இயக்குநர் ஜெயபிரகாஷ், திரைக்கதை காட்சி அமைப்பு என்று எந்த இடத்திலும், போரடிக்காத விதமாக படத்தை நகர்த்திச் செல்கிறார்.

 

ஒளிப்பதிவு, இசை அனைத்தும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு இருந்தாலும், ஒரு திரைப்படமாக நம்மை ரசிக்கும்படி இப்படத்தின் கதையை இயக்குநர் ஜெயப்பிரகாஷ் கையாண்ட விதத்திற்காக பலமாக அப்ளாஷ் கொடுக்கலாம்.

 

மேங்கிங்படி படத்தில் சில அல்ல பல குறைபாடுகள் இருந்தாலும், திரைப்படமாக பார்க்கும் போது, அனைவரையும் “அட....அட....” என்று சொல்ல வைக்கும் விதத்தில் தான் இப்படம் இருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ புதிய முயற்சி என்று சொல்வதை விட புத்திசாலித்தனமான முற்சி என்றே சொல்ல வேண்டும். சபாஷ் இயக்குநர் ஜெயப்பிரகாஷ்.

 

ரேட்டிங் 3/5


Recent Gallery