Latest News :

’மனுசங்கடா’ விமர்சனம்

2a27be1f20261e7c5c01d5c7cba14e48.jpg

Casting : Rajiv Anand, Sheela Rajkumar

Directed By : Amsan Kumar

Music By : P.S.Shankar

Produced By : Gana.Natkunan. S.Thara

 

ஜாதி பிரச்சினையை பட்டும் படாமல் பேசி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து ஜாதி பிரச்சினையை பற்றி பேசும் மற்றொரு படமாக வெளியாகியிருக்கும் இந்த ‘மனுசங்கடா’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, யதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் விருதுக்குரிய படம் அல்லது டாக்குமெண்டரி படம் போல இருந்தாலும், உண்மை சம்பவத்தை, படம் பார்ப்பவர்களின் கண் முன் நிறுத்துவதில் ஒட்டு மொத்த படக்குழுவினரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள், என்றே சொல்ல வேண்டும்.

 

உயிரோடு இருக்கும் போதும் தலித் மக்கள் ஜாதி பிரிவினையால் பல இன்னல்களை சந்திக்க, இறந்த பிறகும் அவர்களுக்கு அந்த இல்லன்கள் தொடர்வது தான் இந்த படத்தின் கதை.

 

இறந்த தலித்தின் உடலை, பொதுவழியாக இருந்தாலும், தாங்கள் இருக்கும் வழியில் எடுத்துச் செல்லக் கூடாது என்று மேல் ஜாதியினர் முரண்டு பிடிக்க, அவர்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் தலித் சமூகம் அதில் வெற்றி பெற்று, பொதுவழியில் இறந்தவர்கள் உடலை எடுத்துச் செல்லலாம், என்ற நீதிமன்ற உத்தரவையும் கையில் வைத்திருந்தும், உயர் ஜாதியினரின் பண பலம், ஆள் பலம், அதிகார பலம் என அனைத்தும் சேர்ந்து, அவர்கள் கையில் இருக்கும் நீதிமன்ற உத்தரவை வெறும் காகிதமாக எண்ணி, அவர்களை எப்படி பந்தாடுகிறது, என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அம்சன் குமார்.

 

படம் ஒன்றரை மணி நேரமாக இருந்தாலும், இயக்குநர் காட்சிகளை ரொம்பவே மெதுவாக கையாண்டிருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக இருக்கிறது. இருப்பினும், இந்த படத்திற்கு அப்படித்தான் காட்சிகளை அமைக்க வேண்டும் என்றாலும், அது பல இடங்களில் ரசிகர்களை சலிப்படைய செய்கிறது. அதே சமயம், படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் நடிப்பு ரொம்பவே எதார்த்தமாக இருக்கிறது.

 

அரவிந்த் சங்கரின் இசையும், பி.எஸ்.சங்கரின் ஒளிப்பதிவும் தனித்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும், கதைக்கு ஏற்ப பயணித்து காட்சிகளை இயல்பாக கொடுத்திருக்கிறது.

 

தலித் சமூகத்திற்கு எதிராக நடக்கும் அல்லது நடந்த இந்த சம்பவத்தை தைரியமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அம்சன் குமாருக்கு பலமான அப்ளாஷ் கொடுக்கலாம். கமர்ஷியலாக படம் இல்லை என்றாலும், ஒரு விஷயத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு விழிப்புணர்வு படமாக இப்படம் சிறந்த படம் என்றே சொல்ல வேண்டும்.

 

மொத்தத்தில், இந்த ‘மனுசங்கடா’ ஒட்டு மொத்த தலித் மக்களின் குமுறலாக இருக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery