Latest News :

‘தாதா 87’ விமர்சனம்

25501abcb3795322f138b457bcbe2fa6.jpg

Casting : Charuhaasan, Saroja, Anand Pandi, Sri Pallavi, Janagaraj

Directed By : VijaySriG

Music By : Leander Lee Marty, Al Rufan, Deepan Chakravarthy

Produced By : Kalaiselvan (Kalai Cinemas)

 

கமல்ஹாசனின் அண்ணனும், மூத்த நடிகருமான சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும், என்று சொல்லப்படும் ‘தாதா 87’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

ஜாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதி மற்றும் ரவுடி என அனைவரும் பார்த்து பயப்படும் அளவுக்கு டெரரான ரவுடியாக சாருஹாசன் இருக்கிறார். யாராவது தப்பு செய்தால், அதிரடியான தண்டனை கொடுக்கும் சாருஹாசனுக்கு நிறைவேறாதா காதல் இன்று இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் இளம் நாயகன் ஆனந்த் பாண்டி, எந்த பெண்ணை பார்த்தாலும், லவ்வோ லவ் என்று லவ்வும் குணம் கொண்டவர். இப்படி பல பெண்களை காதலிப்பவர் ஹீரோயின் ஸ்ரீ பல்லவியை மட்டும் உயிருக்கு உயிராக காதலிப்பதோடு, அவரை கல்யாணம் செய்துக் கொள்ளவும் ஆசைப்படுகிறார். ஆனந்த் பாண்டியின் காதலை தொடர்ந்து நிராகரிக்கும் ஸ்ரீ பல்லவி, ஒரு கட்டத்தில் அவரது காதலை ஏற்றுக்கொள்வதோடு, தன்னை பற்றி திடுக்கிடும் ரகசியம் ஒன்றை சொல்ல, அதை கேட்டதும், ஸ்ரீ பல்லவியை துரத்தி துரத்தி காதலித்த ஆனந்த் பாண்டி, அவரை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுகிறார். ஸ்ரீ பல்லவியோ அவரை விடாமல் துரத்துகிறார்.

 

அப்படிப்பட்ட அந்த ரகசியம் என்ன, அந்த ரசிகசியத்தால் பிரிந்த ஆனந்த் பாண்டி - ஸ்ரீ பல்லவி காதல் மீண்டும் ஒன்று சேர்ந்ததா, இல்லையா,  87 வயதான தாதாவின் பழைய காதல் என்ன ஆனது என்பது தான், ‘தாத 87’ படத்தின் மீதிக்கதை.

 

‘தாத்தா 87’ என்று தலைப்பு வைப்பதற்கு பதிலாக ‘தாதா 87’ என்று மறந்து போய் தலைப்பு வைத்தது போல தான் படம் இருக்கிறது. மற்றவர்களை தெரிக்கவிடும் படு பில்டப் ரவுடியான சாருஹாசன், ரொம்பவே தளர்ந்து போய் இருக்கிறார். இருந்தாலும், தனது கண்களை மட்டும் அவ்வபோது உருட்டி...உருட்டி...”நானும் ரவுடி தான்...நானும் ரவுடி தான்....”என்று நமக்கு ஞாபகம் படுத்துகிறார்.

 

படத்தில் தாதாவை விட இளம் ஜோடிகளான ஆனந்த் பாண்டி மற்றும் ஸ்ரீ பல்லவி தான் அதிகமாக வருகிறார்கள். அவர்களது காதலும், அதில் இயக்குநர் வைத்த சஸ்பென்ஸும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

 

இளம் ஹீரோவாக ஆனந்த் பாண்டி மற்றும் ஹீரோயின் ஸ்ரீ பல்லவி இருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதிலும் ஸ்ரீ பல்லவி நடித்த கதாபாத்திரத்தையும், அதில் அவர் காட்டிய ஈடுபாட்டையும் பலமாகவே பாராட்டலாம்.

 

Dhadha 87 Review

 

காதல் என்பது வெறும் உடல் உறவுக்காக மட்டும் அல்ல அது ஒரு பீலிங், அன்பை பறிமாறிக் கொள்வது, என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வரும் இயக்குநர் விஜய ஸ்ரீ ஜி, பலவிதமான பாதைகளில் பயணித்து தான் சொல்ல வந்ததை பலவிதமாக சொதப்பி சொல்லியிருப்பது இப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

 

ரஜபாண்டியின் ஒளிப்பதிவும், லியாண்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோரது இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

மொத்தத்தில், இந்த ‘தாதா 87’ வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், அதை சொல்லிய விதத்தால் முட்டாள்த்தனமான படமாக இருக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery