Latest News :

'K13' விமர்சனம்

01eeceeedcf32e8293abc3a9d3096954.jpg

Casting : Arulnithi, Shraddha Srinath, Gayathrie, Aadhik Ravichandar, Yogi Babu

Directed By : Bharath Neelakantan

Music By : Sam C.S

Produced By : Sp Shankar, Santha Priya

 

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், காயத்ரி ஆகியோர் நடித்திருக்கும் ‘K13’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

உதவி இயக்குநரான அருள்நிதி, சினிமாவை கலையாக நேசிப்போடு, விசிடி பார்த்து கதை எழுவதையும், பிறர் கதையில் இன்ஸ்பிரஷன் ஆகி கதை எழுதுவதையும் விரும்பாதவர். சொந்தமாக தன் மனதில் தோன்றும் கதையின் மூலம் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவரை, மது பார் ஒன்றில் சந்திக்கும் ஷரத்த ஸ்ரீநாத், அருள்நிதியுடன் நட்பாக பேசுவதோடு, அவரை தனது வீட்டுக்கும் அழைத்துச் செல்கிறார். சுய நினைவை இயக்கும் அளவுக்கு மது போதையில் இருக்கும் அருள்நிதி ஷ்ரத்த ஸ்ரீநாத்துடன் அவரது வீட்டுக்கு செல்ல, அவர் கண் விழித்து பார்க்கும் போது அவர் கட்டப்பட்ட நிலையில் இருப்பதோடு, அவர் அருகே இருக்கும் சேரில் ஷ்ரத்த ஸ்ரீநாத், இறந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்.

 

ஷரத்தா ஸ்ரீநாத்தை யாரேன்றே தெரியாத நிலையில் அவருடன் வீட்டுக்கு சென்று விபரீதத்தில் சிக்கிக்கொள்ளும் அருள்நிதி, அங்கிருக்கும் தனது தடையங்களை அழித்துவிட்டு அங்கிருந்து யார் கண்ணிலும் படமல் தப்பிக்க முயற்சிக்கிறார். அவர் தப்பித்தாரா, ஷ்ரத்த ஸ்ரீநாத் உயிரிழந்தது எப்படி, அதன் பின்னணி என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ‘கே 13’ என்ற வீட்டில் நடக்கும் சம்பவம் தான் முழுப் படமும் என்பதால் படத்திற்கு இத்தகைய தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

 

K 13 Review

 

சினிமாவை உயிராக நேசிக்கும் உதவி இயக்குநராக அருள்நிதி அழுத்தமாக நடித்திருக்கிறார். தரமான கதைகளை தேர்வு செய்வர், இந்த படத்தை எப்படி தேர்வு செய்தார்? என்ற கேள்வி படம் பார்க்கும் அனைவரது மனதிலும் எழுந்தாலும், தனது பொருப்பை உணர்ந்து முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார்.

 

ஷரத்த ஸ்ரீநாத் அழுத்தமான கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்துவிட்டு போகிறார். காய்த்ரிக்கு சிறு வேடம் தான் என்றாலும் படத்தின் முக்கியமான வேடமாக இருக்கிறார். 

 

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் கேமரா வீட்டுக்குள் சுழன்றுக் கொண்டிருக்கும் போது எதிர்ப்பார்ப்பையும், சற்று வெளியே வரும் போது விறுவிறுப்பையும் கொடுக்கிறது.

 

குறும்படங்களை முழுநீளப் படமாக எடுத்து ஜெயிப்பவர்கள் மத்தியில், முழுநீளப் படத்தை குறும்பட ஸ்டைலில் இயக்குநர் பரத் நீலகண்டன் கொடுத்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் இருக்கும் ட்விஸ்ட்டும், விறுவிறுப்பும் படத்தின் ஆரம்பத்தில் இருந்தாலும், சஸ்பென்ஸின் முடிச்சுகள் அவிழும்போது, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் போவதும், முழு திரைக்கதையும் அருள்நிதியை சுற்றியே நகர்வதாலும், ஆரம்பத்தில் இருக்கும் சுவாரஸ்யம் படம் நகர நகர இல்லாமல் போவதோடு, சற்று சலிப்படையவும் செய்துவிடுகிறது.

 

ஒரே இடத்தில் படம் நகர்ந்தாலும், முடிவில் வித்தியாசத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் அதை சொல்லிய விதத்தில் ரசிகர்களை குழப்பமடைய செய்வதோடு, படம் முழுவதும் சொல்லியதை ரசிகர்களுக்கு புரியாத வகையிலும் சொல்லியிருக்கிறார்.

 

வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், அதை சரியாக கையாளாத இயக்குநர் பரத் நீலகண்டன், படத்தையும் ரசிகர்களையும் வாட்டி வதைத்துவிடுகிறார்.

 

மொத்தத்தில், எதிர்ப்பார்ப்போடு வரும் ரசிகர்களை ஏமாற்றுவதோடு, குழப்பியும் அனுப்புகிறது இந்த ‘K13’

 

ரேட்டிங் 2/3

Recent Gallery