Latest News :

’விவேகம்’ திரை விமர்சனம்

38a33eb6bd8e3993263cf68a61f77c02.jpg

Casting : அஜித், விவேக் ஒபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன்

Directed By : சிவா

Music By : அனிருத்

Produced By : சத்ய ஜோதி பிலிம்ஸ்

வாழ்க்கையில் தன்னை புத்திசாலியாக காட்டிக்கொள்ளும் அஜித், கதை தேர்வில் மட்டும் பல முறை தொடர்ந்து தவறு செய்து வருகிறார். அப்படி அவர் செய்த மேலும் ஒரு தவறு தான் ’விவேகம்’.

 

செர்பியா நாட்டில் இயங்கும் சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு துறையில் உளவாளியாக பணியாற்றும் அஜித், தனி ஒருவராக பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் வல்லமை படைத்தவர். ஆயிரம் துப்பாக்கிங்கள், லட்சம் குண்டுகள் என்று எத்தனை பேர் வந்தாலும், வீடியோ கேம் ஹீரோ போல அத்தனையையும் துவம்சம் செய்யும் அஜித்தின் குழுவில் விவேக் ஒபராய் உள்ளிட்ட மேலும் மூன்று பேர் பணிபுரிகிறார்கள். இதற்கிடையே அணுகுண்டை விடவும் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டு பூமியில் புதைக்கப்பட்டு, அதன் மூலம் செயற்கையாக பூகம்பத்தை தீவிரவாதிகள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடித்து பலர் உயிரிழக்க, மேலும் இரண்டு வெடிகுண்டுகள் உலக நாடுகள் ஒன்றில் புதைக்கப்பட்டிருக்க, அவற்றை கண்டுபிடித்து மக்களை காப்பாற்ற வேண்டிய அசைன்மெண்ட் அஜித் அண்ட் டீமுக்கு கொடுக்கப்படுகிறது.

 

கொடுக்கபப்ட்ட வேலையை கச்சிதமாக முடிக்கும் அஜித், வெடிகுண்டை தேடும் போது, முதல் வெடிகுண்டை வெடிக்க செய்தது கம்ப்யூட்டர் ஹக்கரான அக்‌ஷரா ஹாசன் என்பது தெரிய வருகிறது. யாராலும் நெருங்க முடியாத அவரை தேடி பிடிக்க்கும் அஜித்துக்கு அக்‌ஷரா ஹாசான், வெறும் துருப்பு  சீட்டு தான், உண்மையில் குண்டை வெடிக்கச் செய்தது வேறு ஒருவர் என்பதை அறிந்துக்கொள்வதோடு, அக்‌ஷரா ஹாசன் உதவியுடம் மற்ற இரண்டு குண்டுகளை வெடிக்க செய்யாமல் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட, அஜித்தை விவேக் ஒபராய் கொலை செய்துவிட்டு அந்த ஆயுதத்தை வெடிக்கச் செய்யும் கருவியை கைப்பற்றி தீவிரவாதிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்.

 

குண்டடிப்பட்டு உயிருக்கு போராடும் அஜித், காயத்தில் இருந்து மீண்டு தனி ஒரு ஆளாக இருந்து, நட்பு என்ற பெயரில் தனதுக்கு துரோகம் செய்த விவேக் ஒபராய் உள்ளிட தனது குழுவினரை வீழ்த்தி விட்டு, எப்படி மக்களை காப்பாற்றுகிறார் என்பது தான் ‘விவேகம்’ படத்தின் மீதிக்கதை.

 

அஜித்தை போல படமும் நல்லா பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் முழு படத்தையும் எடுத்துள்ள இயக்குநர் சிவா, கதை ஏன் வெளிநாட்டில் நடக்கிறது, தமிழரான அஜித் ஐரோப்பிய நாட்டில் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் தெளிவாக சொல்லாமல் ரசிகர்களுக்கு தலை வலியை கொடுத்திருக்கிறார்.

 

ஃபேஷன் ஷோவில் நடக்கும் மாடல் போல நடப்பது, கார் அல்லது மோட்டார் பைக் ஓட்டுவது, மீசையை ஒட்ட சேவ் செய்துவிட்டு அடிக்கடி க்ளோசப்பில் சிரிப்பது, இரண்டு வார்த்தை வசனத்தை இரண்டு பக்க வசனம் போல பேசுவது ஆகியவை தான் சிறந்த நடிப்பு என்று நம்பிக் கொண்டிருக்கும் அஜித், அவரது ரசிகர்களை ஏமாற்றுவதுடன் தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறார். இந்த படத்திற்காக பனியில் சட்டை இல்லாமல் நடித்தது, உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வர வைத்தது, என்று கதாபாத்திரத்திற்காக அஜித் உழைத்தது பாராட்டக்கூடியது தான். ஆனால், கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்தாரா? என்றால் அதுதான் இல்லை.

 

காஜல் அகர்வாலுக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இருக்காது என்பது தெரியும், ஆனால், ஹீரோவுடன் டூயட் பாட்டு கூட இல்லை என்பது அவரை வருத்தமடைய செய்ததோ இல்லையோ, ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அதிலும், அவருக்கு கொடுக்கப்பட்ட காஸ்டியூம், ஹேர் ஸ்டைல் யாவும் அவருக்கு சூட்டாகவே இல்லை. 

 

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் அக்‌ஷரா ஹாசன், பெசாம நடிக்காமலே இருந்திருக்கலாம். அவரது வேடம் படத்திற்கு முக்கியமான வேடம் தான் என்றாலும், அந்த வேடத்தை கையாண்ட விதமும், அதில் அவர் நடித்த விதமும் செம சொதப்பல். அக்‌ஷரா ஹாசனின் வேடம் இப்படி என்றால், படத்தின் வில்லனான விஜய் ஒபராய் வேடம் படு மோஷம். 

 

வார்த்தைக்கு வார்த்தை சர்வதேச படம் என்று இயக்குநர் சிவா சொன்னாலும், ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட எந்த தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரம் தென்படவே இல்லை. அனிருத்தின் இசையில் பாடல்கள் சொதப்பல் என்றால் பின்னணி இசை சொதப்பலோ சொதப்பல். அதிரடியான ஆக்‌ஷன் காட்சி வரும் இடத்தில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டிய ஒளிப்பதிவாளர் வெற்றி நம் கண்களுக்கு வலி ஏற்படும் விதத்தில் கேமராவை கையாள, அந்த இடத்தில் அனிருத் போட்டிருக்கும் பின்னணி இசை காமெடிக் காட்சி பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. 

 

டைடிலுக்கு முன்பாக வரும் ஆரம்ப காட்சியே, படம் ரசிகர்களை பாடாய் படுத்தப் போகிறது என்பதை தெரியப்படுத்தி விடுகிறது. ஒற்றை ஆளாக அஜித் செய்யும் அந்த சாகஷம் அவரது ரசிகர்களுக்கான விருந்து என்றாலும், அந்த ரசிகர்களே வெட்கப்படும் அளவுக்கு ரொம்ப ஓவர் டோசாக இருக்கிறது. மாஸ் ஹீரோவை மாசாக காட்டுவது தவறில்லை. ஆனால் அதை கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளும்படி காட்ட வேண்டும் என்பதுதான் சினிமா தர்மம், அந்த தர்மத்தை துளி கூட மதிக்காத இயக்குநர் சிவா, வீடியோ கேமையே மிஞ்சும் அளவுக்கு காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

அஜித்தின் எண்ட்ரி, காதல் காட்சிகள், படத்தின் முக்கிய திருப்புமுனை என்று எந்த காட்சியும் புதிதாக இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஹீரோயிஷம் படம் எப்படி இருக்குமோ, அதே பார்மட்டில், பல கோடி செலவு செய்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், சர்வதேச சினிமா என்பதற்கான சரியான அர்த்தம் தெரியாத அஜித்தும், இயக்குநர் சிவாவும் சேர்ந்த்து காஸ்ட்லியான பவர் ஸ்டார் படத்தை கொடுத்து, ரசிகர்களை முட்டாள்களாக்கியிருக்கிறார்கள்.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery