Latest News :

‘காளிதாஸ்’ விமர்சனம்

97380d1a41b13eff63855a3ea4627088.jpg

Casting : Bharath, Ann Sheetal, Adhav Kannadasan, Suresh Menon

Directed By : Sri Senthil

Music By : Vishal Chandrasekhar

Produced By : Leaping Horse Entertainment, Incredible Productions, Dina Studios

 

பரத் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காளிதாஸ்’. அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இப்படம் எப்படி என்று பார்ப்போம்.

 

சென்னையின் ஒரு பகுதியில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் மாடியில் இருந்து குதித்து உயிரிழக்கிறார்கள். இந்த மரணங்கள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்தும், உதவி கமிஷ்னர் சுரேஷ் மேனனும் புலனாய்வு செய்ய, அதன் பின்னணி தான் படத்தின் கதை.

 

சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இயக்குநர் அமைத்திருக்கும் சஸ்பென்ஸான திரைக்கதையும், எதிர்பாரத க்ளைமாக்ஸும் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.

 

போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் பரத், மிடுக்கான போலீஸாகவும், மறுபக்கம் வீட்டில் அமைதியான சுபாவத்தோடும் நடிப்பில் கவர்ந்திருக்கிறார். 

 

போலீஸ் உயரதிகாரியாக நடித்திருக்கும் சுரேஷ் மேனனின் வேடமும், அவரது நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

கணவன் தன்னை கவனிக்கவில்லை என்று கஷ்ட்டப்படும் ஹீரோயின் அன் சீத்தல், இறுதிக் காட்சியில் படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துவிடுகிறார். ஆதவ் கண்ணதாசனின் கதாப்பாத்திரம் ரசிக்க வைக்கிறது.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலும், இயக்குநர் ஸ்ரீ செந்தில் படத்தில் சொல்லியிருக்கும் மறைமுகமான மெசஜுக்காக இப்படத்தை பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

 

Kaalidas Review

 

பெண்களின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கொலையாளி யார்? என்ற கேள்வி படத்தின் இறுதி வரை பயணிக்கிறது. படம் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் யூகிக்க விடாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், எதிர்பாரத க்ளைமாக்ஸை வைத்து அசத்தியிருக்கிறார்.

 

படத்தில் விரசமான காட்சிகள் வைக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் அவற்றை தவிர்த்துவிட்டு நேர்மையான முறையில் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், போலீஸ் என்றால் எப்படி இருக்க வேண்டும், என்ற மக்களின் எதிர்ப்பார்ப்பையும், ஆசையையும் காட்சிகள் மூலமாகவும், வசனம் மூலமாகவும் வெளிக்காட்டியிருப்பவர், அதே போலீஸின் பணிச்சுமை பற்றியும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, சம்பவம் நடைபெறும் இடங்களை காட்சிகள் மூலமாகவே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

 

திரைக்கதை விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸாக நகர்ந்தாலும், படம் முழுவதிலுமே கணவன் - மனைவி இடையிலான உறவு மற்றும் உளவியல் ரீதியிலான விஷயங்கள் குறித்து அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஸ்ரீசெந்திலுக்கு, க்ளைமாக்ஸ் காட்சிக்குப் பிறகு ஒட்டு மொத்த திரையரங்கே எழுந்து நின்று அப்ளாஷ் செய்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘காளிதாஸ்’ மக்கள் மனதை கவரும் போலீஸ்

 

ரேட்டிங் 4/5

Recent Gallery