Casting : Roshan, Heroshini, Priyanka, Vela Ramamoorthy, Ravishankar
Directed By : O.Rajagajini
Music By : NR Raghunandan
Produced By : O.Rajagajini
கல்லூரி மோதல் மற்றும் காதல், அதனால் ஹீரோவுக்கு பல பிரச்சினைகள் வர, அதில் இருந்து மீண்டு காதலில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது தான் கதை.
அறிமுக ஹீரோ ரோஷன், கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போவதோடு, நடனம், ஆக்ஷன் இரண்டிலுமே தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல், நல்ல வேடங்களாக, நல்ல படங்களாக நடித்தால் நடிகராக வளர வாய்ப்புண்டு. ஹீரோயின் ஹீரோஷினியும் புதுமுகம் தான். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
பிரியங்கா, வில்லனாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், ரவிஷங்கர் என அனைவரும் தங்களுக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருக்கிறது. கானா பாடல்களை கூட மொலோடி ஸ்டைலில் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ரொம்ப சத்தமாக இருக்கிறது. ஹோலிக் பிரபுவின் ஒளிப்பதிவு கதையோடு பயணித்திருக்கிறது.
கல்லூரி தேர்தல், மோதல், மாணவிகளிடம் குறும்பு செய்யும் மாணவர்கள் என்று பழைய கல்லூரி நினைவுகளை நம் கண் முன் நிறுத்தும் இயக்குநர் ராஜா கஜினி, கதையை பல கோணத்தில் சொல்லி, குழப்பவதோடு, சில நேரங்களில் கடுப்பேற்றவும் செய்கிறார்.
இருந்தாலும், கல்லூரியை களமாகக் கொண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகியிருக்கும் இப்படம், கல்லூரி மாணவர்கள் ரசிக்க கூடிய படமாக இருக்கிறது. திரைக்கதையை சற்று கவனமாக கையாண்டிருந்தால் வெற்றி படமாக அமைந்திருக்கும்.
ரேட்டிங் 2.5/5