Latest News :

‘மாயநதி’ விமர்சனம்

4b2acdab1850efc53c12329257284ccb.jpg

Casting : Abi Saravanan, Venba, Naren, Appukutty

Directed By : Ashok Thyagarajan

Music By : Raja Bhavatharani

Produced By : Ashok Thyagarajan

 

அறியாத வயதில் காதலில் விழும் பெண்கள் தங்களது எதிர்காலத்தை எப்படி இழக்கிறார்கள், என்பதை சொல்வது தான் கதை.

 

ஹீரோயின் சப்ஜக்ட்டான இப்படத்திற்கு, கதாநாயகி வெண்பா, மிகப்பெரிய பலம். பள்ளி மாணவியாக நடித்திருக்கும் வெண்பா, தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக படிப்பின் மீது கவனம் செலுத்துவதோடு, எது நடந்தாலும் அதை அப்பாவுடன் பகிர்ந்துக் கொள்வது என, அந்த கதாபாத்திரமாக நம் மனதுக்குள் இறங்கிவிடுகிறார். அதே சமயம், காதலால் தனது லட்சியத்தை அடையமுடியாமல் போகும் போது, அவர் மீது பரிதாபப்பட வைத்துவிடுகிறார். அப்படி ஒரு இயல்பான, பாவமான முகம் கொண்டவராக வெண்பா இருக்கிறார்.

 

ஹீரோ அபி சரவணன், இதுவரை நடித்தப் படங்களிலேயே நல்லப் படமாக இருக்கும் இப்படம், அவரை நடிகராகவும் கவனிக்க வைத்திருக்கிறது. ஆட்டோ ஓட்டுநரான அபி சரவணன், காதலுக்காக ஏங்குவதும், அதே காதலியின் லட்சியம் தன்னால் நிறைவேறாமல் போனதை எண்ணி, அவர் எடுக்கும் முடிவும் நம்மை கலங்க வைத்துவிடுகிறது.

 

அப்பா வேடத்தில் எப்போதும் போலவே ஆடுகளம் நரேன் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சற்று கவனிக்க வைப்பவர். திரும்ப வர மாட்டாரா, என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துகிறார்.

 

அப்புக்குட்டி, ஹீரோவின் அப்பா, வானக்காரராக நடித்துள்ளவர், பள்ளி மாணவிகளாக நடித்தவர்கள், ஹீரோயின் மீது ஆசிட் அடிக்கும் இளைஞர் என படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் திரைக்கதைக்கு ஏற்ப பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

 

ராஜா பவதாரிணி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துடனே பயணிக்கிறது. இசையையும், காட்சிகளையும் பிரித்து பார்க்க முடியாத வகையில் இசை அமைந்துள்ளது. ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. எந்தவிதமான தனித்துவத்தையும் காட்ட முயற்சிக்காமல், ஒளிப்பதிவு செய்திருக்கும் ஸ்ரீவாஸ் தேவாம்சம், பள்ளி மற்றும் ஹீரோயின் வீடு போன்ற குறிப்பிட்ட சில லொக்கேஷன்களை இயல்பாக காட்டியிருக்கிறார்.

 

அறியாத வயதில் ஏற்படும் காதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அசோக் தியாகராஜன், பள்ளி மாணவிகளுக்கான ஒரு பாடமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார். 

 

காட்சி அமைப்பு மற்றும் திரைக்கதை நகர்த்தல் டிவி சீரியல் போலவும், பழைய பாணியில் இருப்பதால் சில இடங்களில் தொய்வாக இருந்தாலும், இயக்குநர் சொல்லியிருக்கும் மெசஜுக்காக, நிச்சயம் இப்படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவிகள் இப்படத்தை பார்க்க வேண்டும்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery