Casting : Akhil, Ishara Nair, Manisha, Krishna Priya, Yogi Babu, Mottai Rajendran
Directed By : kevin
Music By : Varshan - Jayaden
Produced By : Durai Sudhakar
அறிமுக இயக்குநர் கெவின் இயக்கத்தில், அகில், இஷாரா நாயர், மனிஷா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா’. இப்படத்தை நிலா புரமோட்டர்ஸ் சார்பில் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தயாரித்துள்ளார்.
சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் அகில், வாழ்க்கையில் வரும் காதல், அவருடைய லட்சியத்திற்கே எதிராக இருப்பதோடு, அவருக்கே எமனாக உருவடுக்க, இறுதியில் அவர் ஹீரோவானாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.
சினிமாவில் ஹீரோவாக வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் கிராமத்து இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கும் அகில், தன்னால் முடிந்தவரை நடிக்க முயற்சித்திருக்கிறார்.
இஷாரா நாயர், கிருஷ்ண பிரியா, மனிஷா என்று படத்தில் இருக்கும் மூன்று நாயகிகளும் அழகாக இருக்கிறார்கள். கொடுத்த வேலையை சரியாகவும் செய்திருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் கெவின் மற்றும் சூப்பர் சுப்பராயன் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.
மனோபாலா, தங்கதுரை, நாஞ்சில் விஜயன் ஆகியோரது காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது.
யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும், அவர் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது.
மொட்டை ராஜேந்திரன் காமெடி மட்டும் இன்றி குணச்சித்திர நடிகராகவும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக வெட்டப்பட்ட தனது பனமரங்களை கட்டிப்பிடித்து அழும் காட்சிகளில் கைதட்டல் பெருகிறார்.
ரஹீம் பாபுவின் ஒளிப்பதிவில் நாகர்கோவிலின் அழகை முழுமையாக அனுபவிக்க முடிகிறது. வர்ஷன் - ஜெயதீன் இசையில் பாடலும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
காதலால் இளைஞர்களின் லட்சியம் எப்படி சிதைந்து போகிறது, என்ற எளிமையான கருவை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் கெவின், சொல்லிய விதத்தில் சில குளறுபடிகளை செய்திருப்பதோடு, படம் பார்ப்பவர்களையும் சற்று குழப்பி விடுகிறார்.
கோர்வை இல்லாத சில காட்சிகளால் குழப்பமடைந்தாலும், “என்னதான் நடக்கிறது...” என்று படம் முழுவதும் ரசிகர்கள் யோசிக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கெவின், இறுதி காட்சியில் மிகப்பெரிய ட்விஸ்ட்டோடு படத்தை முடிக்கிறார்.
ஒரு படத்தில் சில காட்சிகளில் ட்விஸ்ட் வைப்பார்கள். ஆனால், இயக்குநர் கெவின், முழு படத்தையே ட்விஸ்டாக நகர்த்தி சென்றிருப்பது இறுதியில் சற்று ஆறுதல் தருகிறது.
‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’- ட்விஸ்ட்
ரேட்டிங் 2.5/5