Latest News :

’ஜங்கிள் குரூஸ்’ விமர்சனம்

1e2f3a0faee6c1f460b3020117cc57be.jpg

Casting : Dwayne Johnson, Emily Blunt, Edgar Ramirez, Jack Whitehall

Directed By : Jesume Collet Serra

Music By : James Newton Howard

Produced By : John Davis, John Fox, Dwayne Johnson, Hiram Carcia, Dany Garcia, Beau Flynn

 

இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பேவரைட் WWF ஹீரோ ராக் என்கிற டிவைனே ஜான்சன் நடிப்பில், டிஸ்னி வெளியிடும் சஸ்பென்ஸ் சாகச திரைப்படம் தான் ‘ஜங்கிள் குரூஸ்’.

 

எப்படிப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் அதிசய மலர் ஒன்று பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் உள்ள அதிசய மரம் ஒன்றில் வளர்கிறது. மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியில் உள்ள அந்த மலரை எடுக்க வேண்டும், என்று நாயகி எமிலி ப்ளண்ட் செல்ல, அவருக்கு டிவைனே ஜான்சன் உதவி செய்கிறார். அதே சமயம், வில்லன் கோஷ்ட்டியும் அந்த மலருக்காக அமேசான் காட்டுக்குள் நுழைய, இறுதியில் அந்த மலரை யார் எடுத்தது? என்பதை சாகசம் நிறைந்த பயணத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருப்பது தான் ’ஜங்கிள் குரூஸ்’.

 

அமேசான் காட்டு பகுதியில் அமைக்கப்பட்ட பழங்காலத்து சுற்றுலா படகுத்துறைமுகம், நீரிழ் மூழ்கியிருக்கும் கட்டிடம், ‘நிலவின் கண்ணீர்’ என்று சொல்லக்கூடிய அதிசய மலர் பூக்கும் பிரம்மாண்ட மரம், வித்தியாசமான டால்பின், ஆதிவாசி மக்களின் சாபத்தால் 400 வருடங்களாக அமேசான் காட்டில் இருந்து வெளியேறவும் முடியாமல், இறக்கவும் முடியாமல் வாழும் வித்தியாசமான உடலைக் கொண்ட போர் வீரர்கள் என முழுக்க முழுக்க சிறுவர்களை குஷிப்படுத்துவதற்கான அத்தனை அம்சங்களையும் வைத்து, காட்சிக்கு காட்சி ரசிகர்களை வியப்படைய செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஜவ்மே கொலெட் செர்ரா முயற்சித்திருக்கிறார்.

 

நாயகன் டிவைனே ஜான்சன் ஆக்‌ஷன் மற்றும் அட்வெஞ்சரில் அசத்த, நாயகி எமிலி ப்ளண்ட் அட்வெஞ்சருடன் அழகிலும் அசத்துகிறார். காமெடிக்காக களம் இறக்கப்பட்டுள்ள எட்கர் ராமிரெஸ் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி தான்.

 

பாம்புகள் நிறைந்த உடலோடு சாபம் பெற்ற படை வீரராக நடித்திருக்கும் ஜாக் வைதால், பிரின்ஸ் ஜெஹய்ப்பாக நடித்திருக்கும் ஜெஸ்ஸி ப்ளமென்ஸ் என அனைவரும் தங்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

 

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளின் பிரம்மாண்டத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. அதே சமயம், கலை இயக்கம் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஹாலிவுட் படங்களுக்கான தரத்தோடு இருந்தாலும், அளவுக்கு அதிகமாக இருப்பது சில இடங்களில் சலிப்படைய செய்கிறது.

 

வரலாற்று கதைகளை மையப்படுத்திய அட்வெஞ்சர் பயணத்தை கருவுக்கு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கிராபிக்ஸ் காட்சிகளை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, ஒரிஜினல் கதாப்பாத்திரங்களையும், லைவ் லொக்கேஷன்களையும் கூடுதலாக காட்டியிருந்தால் ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கும். ஆனால், இயக்குநரின் மாயாலாஜ எண்ணத்தால் நமக்கு ஒரு பொம்மை படத்தை பார்ப்பது போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது.

 

அமேசான் காடுகளை மையப்படுத்திய சில ஹாலிவுட் படங்களில் பார்த்த ஏரிகளையே திரும்ப திரும்ப காட்டியிருப்பதால், பட்ஜெட்டில் படம் எடுக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும், சிறுவர்களை ஈர்த்தால் போதும், என்ற படக்குழுவினரின் முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும், என்பது அத்தனை காட்சிகளிலும் தெரிகிறது.

 

மொத்தத்தில், ‘ஜங்கிள் குரூஸ்’ சிறுவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் பயணமாக உள்ளது.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery