Latest News :

‘சின்னஞ்சிறு கிளியே’ விமர்சனம்

e3c8ce3a1f9a2d44bb62cd282d707f0f.jpg

Casting : Senthilnathan, Sandra Nair, Vikramathithan, Kullapalli Leela, Selladurai

Directed By : Sabarinathan Muthupandi

Music By : Masthan Kadar

Produced By : Senbha Creations

 

மருத்துவத்துறை மற்றும் அதைச்சார்ந்த தொழில்த்துறையில் இருப்பவர்கள், நோயாளிகளை குணப்படுத்த மருந்து தயாரிப்பதை விட, புதிய நோய்களை உருவாக்குவதற்கான கிருமிகளை பரப்பிவிட்டு, பிறகு அதற்கான மருந்துகளை வியாபாரம் செய்கிறார்கள், என்ற அதிர்ச்சியான உண்மையை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, இயற்கை மருத்துவத்தின் அவசியத்தையும் பேசியிருக்கிறது ‘சின்னஞ்சிறு கிளியே’ படம்.

 

நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், படம் முழுவதும் வேட்டியுடன் கம்பீரமாக நடித்திருப்பவர், காதல் காட்சிகளில் இறகு போல பறக்கிறார்.

 

நாயகி சாண்ட்ரா நாயர், நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் கவிஞர் விக்ரமாதித்யன், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.

 

பாண்டியன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கிறது. காதல் காட்சிகளில் கையாண்டிருக்கும் கோணங்கள் ரசிக்க வைக்கிறது. மஸ்தான் காதரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

 

குழந்தைகளின் எலும்பு மஜ்ஜையை வைத்து மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை அம்பலப்படுத்தும் வகையில், எழுதி இயக்கியிருக்கும் சபரிநாதன் முத்துப்பாண்டி, பணத்திற்காக மருத்துவத்துறை மக்களை எப்படி பலிவாங்குகிறது என்பதை சொல்லி அதிர வைக்கிறார்.

 

திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் சில குறைகள் இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம், திகைக்க வைக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery