Latest News :

’பேய்மாமா’ விமர்சனம்

6794a1d414dade90bcfcba7292cef24a.jpg

Casting : Yogi Babu, Malavika Menon, Rajendran, MS Baskar, Rekha, Covai Sarala, Chams

Directed By : Shakthi Chidambaram

Music By : Raj Aryan

Produced By : Vignesh Ealappan

 

தாய்மாமாவான யோகி பாபு, பழைய பங்களா ஒன்றில் மாட்டிக் கொண்டு பேய்மாமாவாக மாறிவிட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பேய்களே சிரிக்கும் அளவுக்கு காமெடியாக சொல்லியிருப்பது தான் படத்தின் கதை.

 

யோகி பாபு, மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சாம்ஸ், கோவை சரளா, வையாபுரி, ரமேஷ் கண்ணா, செந்தி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தின் மூலம் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைக்க இயக்குநர் ஷக்தி சிதம்பரம் முயற்சித்திருக்கிறார்.

 

கதையின் நாயகனாக நடித்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளில், தன்னை காமெடியனாக அறிவித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு, இந்த படத்தில் கூடுதலாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். அப்படியே காமெடியில் சற்று கவனம் செலுத்தினால் நல்லது.

 

இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் படம் என்றாலே நையாண்டிக்கும், நக்கலுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், இந்த படத்தில் நடிகர்கள் எண்ணிக்கையை தவிர, மற்ற அனைத்துமே கொஞ்சமாக இருப்பது, சற்று குறைபாடாக இருக்கிறது. இருந்தாலும், அவ்வபோது தனது பாணியில் டிவி நிகழ்ச்சிகள், நடிகர்கள், சாமியர்களை கலாய்த்து ரசிகர்களை திருப்திப்படுத்தி விடுகிறார்.

 

ஆரம்பத்தில் திகிலோடு தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியை மட்டுமே குறி வைத்து நகர்வதால், படம் பார்ப்பவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள்.

 

ராஜ் ஆர்யனின் இசை இறைச்சலாக இருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம் கொஞ்சம் கூடுதல் வேலை செய்திருக்கலாம்.

 

முழுக்க முழுக்க நட்சத்திரங்களுக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், இயக்குநர் எடுத்துக் கொண்ட கதைக்கரு தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இருப்பதோடு, மக்களை எச்சரிக்கும் வகையிலும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery