Latest News :

’அகடு’ விமர்சனம்

735d0b29d2bb3d9cc6562537fff41ce4.jpg

Casting : John Vijay, Sidharth, Sriram Karthik, Anjali Nair, Raveena

Directed By : S.Suresh Kumar

Music By : John Sivanesan

Produced By : Soundaryan Pictures - Vidiyal Raju

R

அடர்ந்த வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் நான்கு நண்பர்கள், அப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்குகிறார்கள். அதே இடத்திற்கு சுற்றுலாவுக்கு வரும் கணவன், மனைவி அவர்களது மகள் ஆகியோருடன் நட்பாக பழகும் நண்பர்கள், அவர்களுடன் சேர்ந்து சுற்றுலாப் பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு அறைக்கு திரும்புகிறார்கள். மறுநாள் காலை, தம்பதியின் மகளும், நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது? என்பதை த்ரில்லர் கலந்த சஸ்பென்ஷுடன் சொல்வது தான் ‘அகடம்’.

 

சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர், ரவீனா ஆகியோரது கதாப்பாத்திரமும், நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

போலீஸ் அதிகாரியாக படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜயின் நடிப்பு பல இடங்களில் ஓவர் ஆக்டிங்காக தெரிகிறது. 

 

தனிமனித ஒழுக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனையை அழுத்தமாக பதிவு செய்யும் கதாப்பாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார் அஞ்சலி நாயர். அஞ்சலி நாயரின் மகளாக நடித்திருக்கும் ரவீனா, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

 

Agadu Review

 

விஜய் ஆனந்த், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர், நான்கு நண்பர்களில் மற்ற இருவர் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஜான் சிவநேசனின் இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. எளிமையான ஒளிப்பதிவாக இருந்தாலும் வனப்பகுதியின் அழகை முழுமையாக ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சாம்ராட்.

 

குறிப்பிட்ட ஒரு களத்தில், குறிப்பிட்ட சில கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு முழுமையான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எஸ்.சுரேஷ் குமார், இறுதியில் சமூகத்திற்கான செய்தி ஒன்றையும் அழுத்தமாக பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

 

போலீஸ் அதிகாரியான ஜான் விஜய், குற்றத்தின் பின்னணி மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேற்கொள்ளும் விசாரணைக் காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு மிக முக்கியமாக இருந்தாலும், அவருடைய நடிப்பு அந்த காட்சிகளை பலவீனப்படுத்தி விடுகிறது. இருந்தாலும், யார் குற்றவாளி? என்பதை யூகிக்க முடியாதபடி காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் படத்தை இறுதி வரை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

மொத்தத்தில், ‘அகடு’ ஆல் ஆடியன்ஸுக்கு ஏற்ற படம்

 

ரேட்டிங் 3/5

Recent Gallery