Latest News :

’எனிமி’ விமர்சனம்

eafde6684bc6a7736fd2d5defef6932c.jpg

Casting : Vishal, Arya, Prakash Raj, Thambi Ramaiah, Mirnalini

Directed By : Anand Shankar

Music By : S.Thaman and Sam CS

Produced By : A.Vinod Kumar

 

சிறு வயதில் நண்பர்களாக இருந்து சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்த இரண்டு நண்பர்கள் பெரியவர்களான பிறகு எதிரிகளாகி மோதிக்கொள்கிறார்கள். இருவரில் வெற்றி பெற்றது யார்?, நண்பர்கள் எதிரிகளானது ஏன்? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் ‘எனிமி’ படத்தின் கதை.

 

ஹாலிவுட் திரைப்பட பாணியில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, சண்டைக்காட்சிகளும் மிக பிரமாண்டமாக உள்ளது.

 

நாயகனாக நடித்திருக்கும் விஷால் மற்றும் வில்லனாக நடித்திருக்கும் ஆர்ய இருவரும் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். நடிப்பை காட்டிலும் சண்டைக்காட்சிகளில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கும் இருவரது உழைப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

பாடல்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் நாயகி மிர்னாளினி ரவியை, சில பாடல் காட்சிகளில் கூட ஓரமாக உட்கார வைத்து அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறார்கள்.

 

விஷாலின் அப்பா வேடத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா, ஆர்யாவின் அப்பா வேடத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் தங்களது வேலை எப்போதும் போல் சரியாக செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் எஸ்.தமனின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை பெரிதாக எடுபடவில்லை.

 

கலை இயக்குநர் ராமலிங்கத்தின் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா அரங்கம் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. படத்தொகுப்பாளர் ரேய்மெண்ட் டெரிக் கிரஸ்ட்டா கச்சித்தமாக காட்சிகளை தொகுத்துள்ளார்.

 

ஹீரோவுக்கு நிகராக வில்லன் கதாப்பாத்திரத்தை சித்தரித்து திரைக்கதையை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ஆனந்த் சங்கர், சில காட்சிகளில் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார். 

 

நாம் ஏற்கனவே பார்த்த கதை தான் என்றாலும், திரைக்கதையிலும், காட்சி அமைப்புகளிலும் வேறுபாட்டை காட்டியிருக்கும் இயக்குநார் ஆனந்த் சங்கர், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் நடக்கம் அதிர்ச்சியான சம்பவங்களை நேர்த்தியாக விவரித்திருக்கிறார்.

 

திரைக்கதை ஓட்டத்தில் சில சிறு சிறு குறைபாடுகள் இருந்தாலும், ‘எனிமி’ ஏமாற்றம் அளிக்கவில்லை.

 

ரேட்டிங் 3/5