Casting : Chams, Padava Gopi, Raghav, Jagan, Vinodhini, Manobala, Santhana Bharathi
Directed By : Arunkanth
Music By : Arunkanth
Produced By : Arunkanth
நாடு முன்னேற்றம் அடைவதோடு, நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், தேர்தலில் நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும். அப்படி அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், தற்போது இருக்கும் தேர்தல் முறையை முற்றிலுமாக மாற்ற வேண்டும், என்ற நாயகனின் கனவு, அரசியலில் மிகப்பெரிய சீர்த்திருத்தத்தை ஏற்படுத்துகிறது. அது என்ன? என்பதும், அதை அவர் எப்படி செய்கிறார் என்பதும் தான் ’ஆபரேசன் ஜுஜுபி’. (Operation JuJuPi)
கதையின் நாயகன் சாம்ஸ், பிரதமராக நடித்திருக்கும் ராகவ், வினோதினி, படவா கோபி, வையாபுரி, மனோ பாலா, சந்தானபாரதி, ஜெகன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் நடித்திருக்கிறார்கள் என்பதை விட பேசியிருக்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் பேசுவதில் எந்த குறையும் வைக்கவில்லை.
படம் முழுவதும் பேச்சுக்கள் நிறைந்திருந்தாலும், அதை காட்சிகளாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பலவிதமான லொக்கேஷன்களை பல கோணங்களில் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் மற்றும் நடிகர்களின் பேச்சுக்களை கச்சிதமாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் வினோத் ஸ்ரீதர் ஆகியோர் இயக்குநருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.
கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் அருண்காந்த், இசை உள்ளிட்ட 14 பணிகளை செய்திருக்கிறாராம். இத்தனை பணிகளை தன் தோள் மீது போட்டு சுமந்திருக்கும் அருண்காந்த், இயக்குநர் பணியை முழுமையாக செய்ய தவறியிருக்கிறார்.
சமூக அக்கறையோடு, கதை எழுதியிருக்கும் இயக்குநர் அருண்காந்த், அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம், திரைப்படமாக அல்லாமல் ஏதோ யூடியூப் வீடியோ பார்க்கும் அனுபவத்தை கொடுப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
இயக்குநரின் எண்ணம் பெரிதாக இருந்தாலும், படத்தின் பட்ஜெட் சிறியதாக இருப்பதும் இயக்குநரின் தடுமாற்றத்திற்கு காரணம் என்பது புரிகிறது. அடுத்த படத்தில் இதுபோல் நம்மை சோதிக்காமல், திரைமொழி மூலம் தனது கதையை சொல்வார், என்று நம்புவோம்.
ரேட்டிங் 2.5/5