Latest News :

‘குருப்’ விமர்சனம்

b92d555150dc6d4f8912a885eee0a3d1.jpg

Casting : Dulquer Salmaan, Sunny Wayne, Sobhita Dhulipala, Shine Tom Chacko, Indrajith Sukumaran, Manoj Bajpayee, Tovino Thomas

Directed By : Srinath Rajendran (

Music By : Nimish Ravi

Produced By : Dulquer Salmaan

 

உயிருடன் இருக்கும் ஒருவர், தான் இறந்துவிட்டதாக மற்றவர்களை நம்ப வைத்து, அதன் மூலம் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்ய முயற்சிக்கிறார். அது என்ன தவறு?, அதை அவர் எப்படி செய்கிறார், என்பதை சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘குருப்’ படத்தின் கதை.

 

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், 80-களில் கதை நடக்கிறது. அதற்கு ஏற்ப நாயகன் துல்கர் சல்மான், கெட்டப்பில் அசத்துவதோடு, குருப் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லத்தனத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். விதவிதமான உடைகள் மூலம் அசத்தும் துல்கர், நடிப்பிலும் பட்டையை கிளப்புகிறார்.

 

விசாரணை அதிகாரியாக வரும் இந்திரஜித், கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, ஹீரோவுக்கு நிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.

 

ஷோபிடா துலிபலா படத்தின் நாயகி என்றாலும், துல்கர் சல்மானின் மனைவி வேலையை மட்டுமே பார்க்கிறார்.

 

ஷைண்டாம் சாக்கோ, ஷன்னி வெய்ன், டொவினோ தாமஸ், பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், பங்கலனின் கலை இயக்கமும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

சுஷின் ஷ்யாமின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.

 

80-களில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்ப மும்பை மற்றும் கேரளாவை காட்சிப்படுத்திய விதம் மிக நேர்த்தியாக உள்ளது. அக்காலத்து ரயில், விமான நிலையம் போன்றவற்றை மிக நேர்த்தியாக உருவாக்குவதற்கு படக்குழு கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.

 

துல்கர் சல்மானை பல கெட்டப்புகளில் காட்டியிருப்பதோடு, அவருடைய கதாப்பாத்திரம் செய்யும் வீரதீர செயல்களை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன், எந்த நடிகரை எப்படி பயன்படுத்த வேண்டும், என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்.

 

சுவாரஸ்யமான கதைக்கரு என்றாலும், திரைக்கதை எழுதிய டேனியல் சயூஜ் நாயர் மற்றும் கே.எஸ்.அரவிந்த் ஆகியோரின் தடுமாற்றத்தாலும், படத்தொகுப்பாளர் விவேக் ஹர்சனின் தாராள மனசாலும் சில இடங்களில் படத்தின் விறுவிறுப்பு பாதிக்கப்படுகிறது. இருந்தாலும், இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன், குருப் என்ற கதாப்பாத்திரத்தை கையாண்ட விதம் மற்றும் அதில் துல்கர் நடித்த விதம் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery