Casting : Ragul, Selva, Anitha, Nalini, Karate Raja, Soundarrajan, Vaiyapuri, Kottachi
Directed By : Bhagavathi Bala
Music By : Deva
Produced By : Periya Nayagai Films
பலரை ஏமாற்றி பணம் அறிந்து அதில் ஜாலியாக ஊர் சுற்றி வரும் நாயகன் ராகுல், தனது நண்பருடன் சேர்ந்து ஸ்டுடியோ ஒன்றை தொடங்குகிறார். அதற்காக அனிதாவிடம் கடன் வாங்க, அவரோ ராகுலிடம் கடனை வசூல் செய்யும் நடவடிக்கை இறங்க ஒரு கட்டத்தில் அவர் மீது காதல் வயப்படுகிறார்.
அதே ஊரில், மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருக்கும் செளந்தர்ராஜன், அமைச்சர் பதவிக்காக சென்னைக்கு செல்லும் போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. கொலை செய்தது யார்?, கொலை பழியில் இருந்து நாயகன் தப்பித்தாரா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் ராகுல், கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியிலும் அனல் பறக்க சண்டை செய்திருக்கிறார்.
இன்னும் சற்று கூடுதலான பயிற்சி எடுத்தால், தமிழ் சினிமாவில் நல்ல இடம் ஒன்று அவருக்கென்று நிச்சயம உருவாகும்.
நாயகி அனிதா, தனது முதல் படம் போல் அல்லாமல், அனுபவ நடிகை போன்ற ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். யாருக்கும் அடங்காமல் ரெளடி போன்று கெத்தான கதாபாத்திரத்தை சற்றும் சறுக்காமல் கொடுத்திருக்கிறார் நாயகி.
ஒருசில காட்சிகள் மட்டுமே வந்தாலும், மனதில் நீங்கா கதாபாத்திரமாக நிற்கிறார் நளினி.
வில்லனாக வந்த கராத்தே ராஜா, தனது வில்லத்தனத்தை நேர்த்தியாக செய்து மிரட்டியிருக்கிறார். வையாபுரி மற்றும் செளந்தர்ராஜன் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
தேவா இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னணி படத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கும் பகவதி பாலா, சமுதாய கருத்து மற்றும் அரசியல் விமர்சன வசனங்கள் மூலம் கவனிக்க வைக்கிறார்.
காமெடி, காதல், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என அனைத்தையும் சேர்த்து ஒரு கமர்ஷியல் மசாலப்படத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர், அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறியிருப்பதோடு, படம் பார்ப்பவர்களையும் தண்டித்து விடுகிறார்.
ரேட்டிங் 2/5