Latest News :

’க்’ விமர்சனம்

a7ce9818c8ee0dd56e402738cc7a313d.jpg

Casting : Yogesh, Gurusomasundaram, Anicka Vikhraman,Y Gee Mahendra, Aadukalam Naren

Directed By : Babu Thamizh

Music By : Gavaskar Avinash

Produced By : Dharmraj Films

 

கால்பந்து வீரரான நாயகன் யோகேஷ், போட்டியின் போது கால் மற்றும் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷுக்கு சில உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படுவதோடு, நடக்காத ஒரு கொலை சம்பவம் அவர் கண் முன் வருகிறது. அந்த சம்பவம் மற்றும் அதில் இருப்பவர்கள் யார்? என்பதை அறியும் முயற்சியில் இறங்கும் யோகேஷுக்கு மன ரீதியிலான சில பாதிப்புகள் ஏற்பட, அவற்றுக்கான தீர்வு மற்றும் அவர் பார்த்ததாக சொல்லும் கொலை சம்பவத்தின் பின்னணி என்ன? என்பதே ‘க்’ படத்தின் கதை.

 

முழுமையற்ற சில கதைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் வித்தியாசமான முயற்சியாக உருவாகியிருக்கும் இப்படம் பலவித குழப்பங்களோடு நகர்ந்தாலும், என்ன நடக்கப் போகிறது, என்ற எதிர்ப்பார்ப்போடு நம்மை படத்துடன் பயணிக்க வைக்கிறது.

 

நாயகனாக நடித்திருக்கும் யோகேஷ் புதுமுகமாக இருந்தாலும், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் நாயகி அனிகா, கொடுத்த வேலையை சரியாக செய்திருப்பதோடு, கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார்.

 

குரு சோமசுந்தரம் படத்தின் அடையாளமாக திகழ்கிறார். சிறு சிறு ரியாக்‌ஷன்கள் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர், தனது நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளார்.

 

கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கவாஸ்கர் அவினாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நிறைவு.

 

படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை நம்மை கட்டிப்போடும் விதத்தில் காட்சிகளை நகர்த்தி செல்லும் இயக்குநர் பாபுதமிழ், அவ்வபோது சில சம்பவங்கள் மூலம், படம் பார்ப்பவர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சீட் நுணிக்கு வர வைத்துவிடுகிறார். ஆனால், அந்த காட்சிகளுக்கான தீர்வுகளை சொல்வதை சரியாக சொல்லாமல், ரசிகர்களை குழம்பிய மனநிலைக்கு தள்ளிவிடுகிறார்.

 

இறுதியில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், என்பது புரிந்தாலும், இடையில் அவர் சொல்லிய சில விஷயங்களும், காட்சிப்படுத்திய சில சம்பவங்களும் விடை தெரியாத வினா போன்று இருப்பதும், சொல்ல வந்ததை எளிமையான முறையில் சொல்ல தவறியதும் படத்தின் மிகப்பெரிய பலவீனம். 

 

அதே சமயம், ஒரு சிறிய கருவை வித்தியாசமான திரைக்கதையோடும், சுவாரஸ்யமான காட்சியமைப்புகளோடும் சொல்ல முயற்சித்த இயக்குநர் பாபுதமிழை வெகுவாக பாராட்டலாம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery