Casting : Harikumar, Madhavi Latha, Suman, MS Baskar, Radharavi, Saravanan
Directed By : Rajarishi.K
Music By : Ilayaraja
Produced By : Kaalayappa Pictures
மதுரை மார்க்கெட்டில் குறைந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் நாயகன் ஹரிகுமாருக்கும், நாயகன் மாதவி லதாவும் காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார்கள். திருமணம் நடந்த சில நாட்களிலேயே ஹரிகுமாரின் எதிரிகள் அவரை கொலை செய்துவிட, இறந்த ஹரிகுமார் மீண்டும் வந்து, தனது எதிரிகளை பழி தீர்க்கிறார். இறந்தவர் எப்படி மீண்டும் வந்தார், எப்படி எதிரிகளை பழி தீர்த்தார் என்பதே ‘மதுரை மணிக்குறவன்’ படத்தின் கதை.
ஹரிகுமார் மணி என்ற கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆட்டத்துடன் ஆக்ஷனிலும் அதிரடி காட்டியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மாதவி லதா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் சுமன், சரவணன், ஜி.காளையப்பன், ராதாரவி, கெளசல்யா, பருத்திவீரன் சுஜாதா என படத்தில் நடித்த அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைப்பதோடு, நீண்ட நாட்களுக்கு பிறகு புரியும்படியான நல்ல பாடல்களை கேட்ட அனுபவத்தையும் கொடுக்கிறது.
டி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக உள்ளது. கோவில் திருவிழா காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ள ஒளிப்பதிவாளர் பாடல் காட்சிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல முறை சொல்லப்பட்ட கமர்ஷியல் கதை தான் என்றாலும், அதில் அனைத்துவிதமான அம்சங்களையும் சேர்த்து முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்குநர் ராஜரிஷி.கே கொடுத்துள்ளார்.
மரணமடைந்த ஹரிகுமார் போலீஸ் அதிகாரியாக வருவது எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்டாக இருப்பதோடு, அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்கிறது.
மொத்தத்தில், ‘மதுரை மணிக்குறவன்’ முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம்
ரேட்டிங் 2.5/5