Latest News :

’பீஸ்ட்' விமர்சனம்

5c383917cac1f91429a60987d115faf0.jpg

Casting : Vijay, Pooja Hegde, Selvaraghavan, Yogi Babu, Redin Kingsley, VTV Ganesh, Aparna Das, Shine Tom Chacko, Liliput Faruqui, Ankur Ajit Vikal

Directed By : Nelson Dilipkumar

Music By : Aniruth

Produced By : Sun Pictures

 

ரா அதிகாரியான விஜய், பாகிஸ்தானுக்கு நுழைந்து தீவிரவாத இயக்கத்தின் தலைவரை கைது செய்து வருகிறார். அதனால் பதிலுக்கு இந்தியாவுக்குள் நுழையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சென்னையில் உள்ள மால் ஒன்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அங்கிருந்த மத்திய அமைச்சரின் குடும்பத்தார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைய கைதிகளாக வைத்துகொண்டு, கைது செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தின் தலைவரை விடுதலை செய்ய வேண்டும், என்று பேரம் பேசுகிறார்கள். வேறு விஷயத்திற்காக விஜய் மாலில் இருக்க, முதலில் அவருடைய உதவியை நாடும் மத்திய அரசு, பிறகு தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்க முடிவு செய்ய, விஜய் என்ன செய்கிறார், என்பதே படத்தின் மீதிக்கதை.

 

ராணுவ அதிகாரி வேடத்திற்கு ஏற்ற உடல்வாகு, ஸ்டைலிஷான நடிப்பு, சண்டைக்காட்சிகளில் இயல்பான உடல் மொழி, வசன உச்சரிப்பு, நாயகி உடனான காட்சிகளில் துள்ளல் நடிப்பு என அத்தனை ஏரியாவிலும் ரசிக்க வைக்கும் விஜய், இன்னமும் கல்லூரி மாணவரைப் போல் இளமையாகவே இருக்கிறார். படம் முழுவதும் அவர் மட்டுமே நிறைந்திருந்தாலும், தனி மனிதராக முழு படத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

 

கமர்ஷியல் படங்களில் கதாநாயகிகள் எந்த அளவு பயன்படுத்தப்படுவார்களோ அதே அளவுக்கு பூஜா ஹெக்டே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தனது வேலையை நிறைவாக செய்திருக்கிறார். நடனக் காட்சிகளில் சிறப்பு கவனம் பெறுகிறார்.

 

ரா பிரிவு அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் செல்வராகவன், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மத்திய அமைச்சருடனான அவரது உரையாடல் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது.

 

யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பு. அதிலும், சதீஷை விடிவி கணேஷ் கலாய்க்கும் காட்சிகள் அனைத்தும் நம்மை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.

 

மனோஜ் பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறது.

 

வில்லன்களாக நடித்திருக்கும் அன்கூர் அஜித் விகால், லில்லிபுட் பரூக், சாஜி ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

 

அனிருத்தின் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை மூலமும் பலம் சேர்த்திருக்கும் அனிருத்தின் பீஜியம்கள் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறது.

 

படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் முக்கிய பங்கு வகித்தாலும், புதுஷாக இல்லாமல் இருப்பது சற்று சலிப்படைய வைக்கிறது. இருந்தாலும் விஜய் அதை கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது.

 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்ற பழைய பார்மெட் தான் கதைக்களமாக இருந்தாலும், அதை பொழுதுபோக்காகவும், மாஸாகவும் இயக்குநர் நெல்சன் சொல்லியிருக்கிறார்.

 

படத்தின் இரண்டாம் பாதியில் சில குறைகள் இருந்தாலும், விஜயின் மாஸாலும், நடிப்பாலும் அந்த குறைகள் காணாமல் போய்விடுகிறது. 

 

விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தாமல் அனைத்து ரசிகர்களுக்குமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் நெல்சன், இரண்டரை மணி நேரம் படத்தை ஜாலியாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.

 

மொத்தத்தில், ‘பீஸ்ட்’ பெஸ்ட்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery