Latest News :

‘அக்கா குருவி’ விமர்சனம்

c20f6af45fd10c95f00cc46c4151f3f2.jpg

Casting : Master Maheen, BabyDaviya, VS Kumar, Thara Thagathambi, Harish, Meenakshi

Directed By : Saamy

Music By : Ilayaraja

Produced By : Madurai Muthu Movies and Kanavu Thozhirsalai

 

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் - தங்கை இருவரும் கான்வெண்ட் பள்ளியில் படிக்கிறார்கள். தங்கை சாராவின் ஷூ திடீரென்று காணாமல் போகிறது. கான்வெண்ட் பள்ளி என்பதால் ஷூ இல்லாமல் பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டார்கள். வறுமையில் இருக்கும் தந்தையிடம் ஷூ தொலைந்ததை சொல்லி புதிய ஷூவும் வாங்க முடியாது, அதே சமயம் பள்ளிக்கும் போகாமல் இருக்க முடியாது, என்ற சூழலில் சிறுமி சாராவுக்கு அவருடைய அண்ணன் தேவா தனது ஷூவை கொடுத்து உதவி செய்கிறார். 

 

சாராவின் பள்ளி நேரம் முடிந்ததும் தேவா ஓடிப்போய் தங்கையிடம் இருந்து ஷூ-வை வாங்கி அணிந்து கொண்டு தனது பள்ளிக்கு ஓடுகிறான். இப்படி அண்ணனும், தங்கையும் ஒரே ‘ஷூ’வை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு ஷூ தொலைந்த விஷயம் வீட்டுக்கு தெரியாமலும், அதே சமயம் பளிக்கும் சென்று வரும் நேரத்தில், தங்கைக்கு புதிய ஷூ வாங்கும் முயற்சியில்  ஈடுபடும் தேவா, புதிய ஷூ வாங்கினாரா இல்லையா, என்பதை மிக உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் ‘அக்கா குருவி’.

 

உலகப்புகழ் பெற்ற ஈரானிய திரைப்படமான ’சில்ட்ரென்ஸ் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்து இயக்கியிருக்கும் இயக்குநர் சாமி, கதைக்கரு மற்றும் காட்சி அமைப்புகளில் இருக்கும் உணர்வுகளை எந்த வகையிலும் மாற்றாமல் மிக நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.

 

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் மஹீன், சிறுமி தாவியா இருவரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். காணாமல் போன ஷூ பற்றி வீட்டில் சொல்லாமல் சமாளிக்கும் காட்சிகளில் தாவியாவும், தங்கையை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை மற்றும் புதிய ஷூ வாங்கும் முயற்சிகளினால் சிறுவன் மஹீனும் படம் முடிந்த பிறகும் நம் கண்களை விட்டு அகலவில்லை.

 

சிறுவர்களின் பெற்றோர்களாக நடித்திருக்கு வி.எஸ்.குமார் மற்றும் தாரா தகதம்பி, காதல் ஜோடியாக நடித்திருக்கும் ஹரிஷ் மற்றும் மீனாக்‌ஷி ஆகியோரும் அளவான நடிப்பு மூலம் மனதில் நிற்கிறார்கள்.

 

இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. உத்பல் வி.நயனாரின் ஓளிப்பதி கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

’சில்ட்ரென்ஸ் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) படத்தை ஏற்கனவே பார்த்தவர்கள் ஆச்சரியமடையும் விதத்தில் இருக்கும் இந்த படம், அப்படத்தை பார்க்காதவர்கள் வியக்கும் விதத்தில் இருக்கிறது.

 

உலக அளவில் ஹிட்டான் ஒரு படத்தை அதன் உணர்வு மாறாமல் அப்படியே நம்ம ஊருக்கு ஏற்றபடி மிக நேர்த்தியாக இயக்கியிருக்கும் இயக்குநர் சாமியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்

 

சிறுவர்கள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் ஒரு நல்ல படத்தை பார்த்த முழுமையான திருப்தியை கொடுக்கும் வகையில் இருக்கும் ‘அக்கா குருவி’ அனைத்து தரப்பினரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery