Latest News :

’உழைக்கும் கைகள்’ விமர்சனம்

9a76c97e38e4a6d0997b8fe7f6583455.jpg

Casting : Namakkal MGR, Kiranmai, Jaquar Thangam, Senthilnathan, Bonda Mani

Directed By : Namakkal MGR

Music By : Shangar Ganesh

Produced By : Doctor K.Surya Kumaragurubaran

 

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியான ‘விவசாயி’ படத்தின் ரீமேக்காக ருவாகியிருக்கும் படம் ‘உழைக்கும் கைகள்’.நாமக்கல் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் இந்த படத்தை டாக்டர் கே.சூர்யகுமரகுருபரன் தயாரித்திருக்கிறார்.

 

சுமார் 50 வருடங்களுக்கு முன் வெளியான படத்தின் கதையை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு விறுவிறுப்பாக சொல்லியிருப்பதோடு, தற்போதுள்ள விவசாயிகளின் பிரச்சனைகளை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

 

எம்.ஜி.ஆர் போல மேக்கப் போட்டுக்கொண்டு பல நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தி வரும் நாமக்கல் எம்.ஜி.ஆர் கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, எம்.ஜி.ஆர் போல் மேனரிசம் செய்து அசத்துகிறார். லாங் ஷாட்களில் பார்க்கும் போது அப்படியே எம்.ஜி.ஆரை பார்ப்பது போல் இருக்கிறது. காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆர் ஆகவே வாழ்ந்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் கிரண்மை கொடுத்த வேலை சிறப்பாக செய்ததோடு, நடனத்திலும் கவனம் பெறுகிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் ஜாக்குவார் தங்கம் மிரட்டலாக நடித்திருக்கிறார். கம்பீரமான தோற்றத்தில் வில்லன் வேடத்தை கச்சிதமாக கையாண்டிருக்கும் ஜாக்குவாரின் நடிப்பும் கம்பீரமாக உள்ளது.

 

படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் போண்டா மணி, ஷர்மிளா, விஜயலட்சுமி, மோகன், பிரேம்நாத், செந்தில்நாதன் என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.

 

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படத்தின் பாடல்களை மீண்டும் இடம்பெற செய்திருப்பது ரசிக்க வைத்திருப்பதோடு, படத்திற்கும் பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசையும் அளவு.

 

சிவாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருப்பதோடு, கதாப்பாத்திரங்கள் அழகாக காட்டப்பட்டிருக்கிறார்கள்.

 

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் நாமக்கல் எம்.ஜி.ஆர், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படத்தின் வீரியத்தை அப்படியே கொடுத்ததோடு, தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளை மிக அழுத்தமாக பேசியிருக்கிறார். விவசாயிகளின் பிரச்சனைகளை பேசினாலும் அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய கமர்ஷியல் படமாகவும் இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘உழைக்கும் கைகள்’ மீண்டும் எம்.ஜி.ஆர் படம் பார்த்த நிறைவை கொடுக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery