Casting : Arun Kumar, Srija, Chinnamani, Sassi Selvaraj,Prasanna Balachandran , Rajesh Balachandran, Savithri Muthamizh, Manoj,Mu Chandrakumar, Dhanam
Directed By : Rajeshwar Kaliswamy
Music By : Vivek Saro
Produced By : Erumbugal Network
கொங்கு மண்டல வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை இணைய தொடரான ‘அம்முச்சி 2’ ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 8 பகுதிகளாக வெளியாகியிருக்கும் இத்தொடர் எப்படி என்பதை பார்ப்போம்.
நாயகி மித்ரா உயர் படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், அவரது படிப்புக்கு அவரது பெற்றோர்களே முட்டுக்கட்டையாக இருக்க, அவரது காதலர் அருண் அவரை படிக்க வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை அருண் எப்படி சமாளித்து தனது காதலியை கல்லூரிக்கு அனுப்புகிறார் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அருண் மற்றும் அவரது மாம மகனான சசி, மாமா பிரசன்னா, அம்முச்சி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பாட்டி, சாவித்ரி என அனைத்து நடிகர்களும் கொங்கு மண்டல கிராமத்து வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள்.
விவேக் சரோவின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சந்தோஷ்குமார் எஸ்.ஜே-வின் ஒளிப்பதிவு கொங்குவட்டார அழகை படம் பார்ப்பவர்கள் அனுபவிக்கும் விதமாக காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
ஒடிடி-யில் வெளியாகும் இணைய தொடர்களில் பெரும்பாலும் க்ரைம் த்ரில்லர், சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று இருக்க, மக்களின் வாழ்வியலோடு காதலை நாகரீகமாக சொன்னதோடு, அதன் பின்னணியில் பெண்கள் உயர்ந்த படிப்புகளை படிக்க வேண்டும், என்ற கருத்தையும் பெண்களை மூளை உட்காரை வைக்கும் பழமைவாத மனிதர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கும் இத்தொடரின் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்.
காதலை மையப்படுத்திய ஒரு கதையை குலுங்க குலுங்கசிரிக்கும் வகையில் காமெடியாக சொல்லியிருப்பதோடு, கொங்குவட்டார மக்களின் வாழ்வியல், கிராம மக்களின் இயல்பான வாழ்க்கை, அவர்களுடைய கோபம், பகை, பாசம் போன்றவற்றையும் மிக எதார்த்தமாக சொல்லியிருப்பது தொடரை முழுமையாக ரசிக்க வைக்கிறது.
தொடரில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் அதற்கு பொருத்தமான நடிகர்கள் மற்றும் அவர்களுடைய இயல்பான நடிப்பு, அவ்வபோது நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் கிராம மக்கள் மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களின் காமெடி, இவற்றுடன் சமூகத்திற்கு முக்கியமான கருத்து என அனைத்தையும் அளவாகவும், அமர்க்களமாகவும் கொண்ட இந்த ‘அம்முச்சி 2’ தொடருக்கு ரசிகரக்ளின் பேராதாரவு நிச்சயம் உண்டு.
ரேட்டிங் 3.5/5