Latest News :

’பாசக்கார பய’ திரைப்பட விமர்சனம்

97355529653de836b218414d409fa73d.jpg

Casting : Vignesh, Gayatri Rema, Shakthi, Kanja Karuppu

Directed By : Viveka Bharathi

Music By : Soundaryan

Produced By : Khayan Picutres - V.Umamakeshwari

 

நாயகி காயத்ரி ரெமாவை நாயகன் சக்தி ஒரு தலையாக காதலிக்கிறார். ஆனால், அவரது காதலை ஏற்க மறுக்கும் காயத்ரி ரெமா, தனக்காக தனது வாழ்க்கையை தொலைத்து சிறைக்கு சென்ற தனது மாமாவுக்கு மட்டுமே தன் மனதில் இடம் இருப்பதாக சொல்லி விடுகிறார். 

 

சிறையில் இருந்து வெளியே வரும் காயத்ரியின் மாமன் விக்னேஷ், அவரிடம் பாசமாக நடந்துக்கொண்டாலும் அவரை திருமணம் செய்ய மறுக்கிறார். ஆனால், காயத்ரி ரெமாவோ விக்னேஷை மட்டுமே திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்க, இறுதியில் யாருடைய காதல் வெற்றி பெற்றது என்பதையும், விக்னேஷ் ஏன் சிறைக்கு சென்றார் என்பதையும் கிராமத்து ஈரத்தோடும், வீரத்தோடும் சொல்வது தான் ‘பாசக்கார பய’.

 

நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ், கிராமத்து இளைஞராக பாசத்திலும், வீரத்திலும் சக்கை போடு போடுகிறார். அக்கா மகள் மீது பாசம் இருந்தாலும், அவரை மனைவியாக பார்க்க தடுமாறும் இடத்தில் நடிப்பில் அசத்துகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, பட்ஜெட் பட திரிஷாவாக வலம் வருகிறார். தாய மாமன் வீட்டை தாற்மஹலாக எண்ணி வாழ்ந்துக்கொண்டிருக்கும் அவர் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

 

காயத்ரி ரெமாவை ஒருதலையாக காதலிக்கும் சக்தியின் நடிப்பிலும் குறையில்லை. கஞ்சா கருப்பின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

 

காயத்ரி ரெமாவின் அப்பாவாக நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் விவேகபாரதி, வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ராஜசேதி என மற்ற நடிகர்களும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் செளந்தர்யனின் இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். கிராமத்து படங்களுக்கு ஏற்றபடி எளிமையான இசைக்கருவிகள் மூலம் இனிமையான இசையை கொடுத்திருக்கிறார்.

 

கே.வி.மணியின் ஒளிப்பதிவில் கிராமத்து லொக்கேஷன்களையும், கிராமத்து மனிதர்களையும் படமாக்கிய விதம் இயல்பு.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் விவேகபாரதி, ஏற்கனவே பார்த்த பழைய கதையோடு பயணித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடுமப உறவுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கிராமத்து கதையை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

 

குறைகள் சில இருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்மையாக சொல்லியிருக்கும் இயக்குநர் விவேக பாரதி, குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘பாசக்கார பய’ பழசு என்றாலும் ஒருமுறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery